Thursday, November 8, 2012

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சமூக அறிவியல் வினாக்கள் பகுதி 10



1. இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி - தக்காண பீடபூமி
2. தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்
3. மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக ஒரிசா மாநிலத்தில் கிடைக்கிறது.
4. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் - ஸ்ரீஹரிகோட்டா
5. தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் - பிச்சாவரம்

6. இபின் பதூதவின் நாடு - மொராக்கோ
7. தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் - ஆனைமலை
8. Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் - டாக்டர் அசிமா சாட்டர்ஜி
9. ஒட்டக சவாரி காணப்படும் இடம் - ஜெய்பூர்
10. கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி - பாலக்காடு கணவாய்
11. உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் - ஸ்புட்னிக்
12. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு - நாய்
13. விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் - லைகா
14. முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ரஷ்யா
15. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை - ஸ்பேஸ் சூட்
16. அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணிபுரிந்தவர் - சுனிதா வில்லியம்ஸ்
17. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர் - கிரவுதர் பால்
18. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரம் - மான்ஸ்டர் ஸ்டார்
19. தமிழத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் - இந்தியப் பெருங்கடல்
20. அரசுக்குட்பட்ட நிறுவனங்கள்- பொதுத் துறை நிறுவனங்கள்
21. மருத்துவ அவசர ஊர்தி எண் - 108
22. தீயணைப்பு நிலைய அவசர உதவி எண் - 101
23. காவல் நிலைய அவசர உதவி எண் - 100
24. பெரிய நகரங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு - மாநகராட்சி
25. ஊராட்சி செய்து தரும் வசதிகள் - தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகள்
26. நெல் விளைய தேவையான மண் - வண்டல் மண்
27. இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் உணவு - அரிசி
28. தமிழர்களின் அடிப்படை உணவு - அரிசி
29. திண்டுக்கல் - பூட்டு
30. சேலம் - மாம்பழம்
31. தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை
32. செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் -  விழுப்புரம்
33. குற்றாலம் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
34. வேளாங்கன்னி ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்
35. முதல் சுதந்திரப் போரில் ஆண் வேடமிட்டு ஆங்கிலேயருடன் போரிட்டவர் - ஜான்சி ராணி
36. வேடந்தாங்கல் அமைந்துள்ள மாவட்டம் - காஞ்சிபுரம்
37. பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் குடிப்பது - கருஞ்சிட்டு
38. ஏழு சகோதரர்கள் என்று அழைக்கப்படுவது - தவிட்டுக் குருவி
39. சிறுமலை வாழைப் பழத்திற்குப் புகழ் பெற்ற மாவட்டம் - திண்டுக்கல்
40. பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது - மாமல்லபுரம்
41. மாமல்லபுரத்தை கட்டியவர்கள் - நரசிம்ம வர்மன்
42. மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் - குறிஞ்சி
43. காடும் காடு சார்ந்த பகுதியும் - முல்லை
44. வயலும் வயலைச் சார்ந்த பகுதியும் - மருதம்
45. கடலும் கடலைச் சார்ந்த பகுதியும் - நெய்தல்
46. மணலும் மணலைச் சார்ந்த பகுதியும் - பாலை
47. APPLE - Ariance Passenger Payland Experiment Research
48. EDUSAT - Educational Satellite
49. PSLV - Polar Satelite Launch Vehicle
50. GSLV  - Geo synchronous satellite launch vehicle

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சமூக அறிவியல் வினாக்கள் பகுதி 11



1. ISRO - Indian Space Research Organization
2. NASA - National Aeronauntics and Space Administration
3. சட்டங்கள் வகுக்கக் காரணம் - பொது நன்மைக்கே
4. இந்தியா அரசியலமைப்பு - உலகிலேயே மிகவும் பெரிதானது
5. இந்தியா அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950

6. இந்தியாவின் குடியரசு நாள் - ஜனவரி 26, 1950
7. இந்தியா ஒரு - இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு
8. இந்தியாவில் வாக்களிக்கும் வயது - 18
9. மக்கள் நலம் காப்பதில் அரசுக்கு வழிகாட்டியாக இருப்பது - வழிகாட்டும் நெறிமுறைகள்
10. மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் - 545
11. மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்கள் - 250
12. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 12
13. மாநிலங்களவை உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது - 30
14. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் - 6 ஆண்டுகள்
15. மக்களவையில் பதவிக் காலம் - 5 ஆண்டுகள்
16. மாநிலங்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை - 238
17. இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு 1952
18. மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
19. மக்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2
20. மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை - 543
21. இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள அவைகள் - இரண்டு, மக்களவை, மாநிலங்களவை
22. மாநிலங்களவையின் பதவிக் காலம் - நிரந்தரமானது
23. இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை - 32
24.  மாநிலங்களின் ஆளுநரை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்
25. அமைச்சரவை சகாக்களுக்குத் துறையை ஒதுக்கீடு செய்பவர் - பிரதம அமைச்சர்
26. பிரதம அமைச்சரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
27. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
28. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்
29. இந்தியாவின் முதல் மக்களவை பெண் தலைவர் - மீரா குமார்
30. அரசாங்கத்தின் சக்தி வாய்ந்த தலைவர் - குடியரசுத் தலைவர்
31. புது தில்லி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை - 70
32. புது தில்லி தேசிய தலைநகராக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1991
33. இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலன் - உச்ச நீதிமன்றம்
34. சார்க் அமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை - 8
35. இலட்சத் தீவுகளின் தலைநகரம் - கவரத்தி
36. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் தலைநகரம் - சில்வாசா
37. அந்தமான்  நிகோபார் தீவுகளின் தலைநகரம் - போர்ட் பிளேயர்
38. மத்திய அரசு நேரடியாக ஆட்சி செய்யும் பகுதிகள் - மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள்
39. முதலமைச்சரை நியமனம் செய்பவர் - மாநில ஆளுநர்
40. தமிழ்நாட்டில் தற்போது உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 234
41. மாநிலங்களின் ஆளுநரை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்
42. பாண்டிய நாடு உள்ளடக்கிய பகுதிகள் - மதுரை, இராமநாதபுரம்
43. மதுரை யாருடைய தலைநகரம் - பாண்டியன்
44. வெண்ணாறு கால்வாயை வெட்டியவர் - கரிகாலன்
45. புலவர் பிசிராந்தையாரின் நண்பனாக விளங்கிய சோழ மன்னர் - கோப்பெருஞ்சோழர்
46. வேளிர் என்பவர்கள் - மலை நாடுகளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள்
47. கல்லணையை கட்டியவர் - கரிகாலன்
48. வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களை தோற்கடித்தவர் - கரிகாலன்
49. பெருநராற்றுப்படையை இயற்றியவர் - முடத்தாமக் கண்ணியார்
50. பட்டினப்பாலையின் ஆசிரியர் - உருத்திரங்கண்ணனார்

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சமூக அறிவியல் வினாக்கள் பகுதி 12



1. சங்க காலத்தில்  தலைசிறந்து விளங்கிய சோழ மன்னர் - கரிகாலன்
2. வேப்பம் பூ மாலையை அணிந்தவர்கள் - பாண்டியர்கள்
3. நீர் வழி போக்குவரத்துக்கு உதவுவது - பரிசல்
4. கடல் பயணம் செய்வோர் எளிதில் திசை அறிய உதவுவது - திசைக் காட்டும் கருவி
5. பள்ளி ஒரு - குடும்பம்
6. மதுரையில் கடைச் சங்கம் ஏற்படுத்தியவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்

7. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டவர்  - இரண்டாம் நெடுஞ்செழியன்
8. பாண்டியனின் துறைமுகம் - கொற்கை
9. தலையாலங்கானத்துச் செகுவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்
10. சங்க காலத்தில் தலைசிறந்து விளங்கிய சோழ மன்னன் - கரிகாலன்
11. பொருநராற்றுப் படையை இயற்றியவர் - முடத்தாமக் கண்ணியர்
12. இந்தியாவில் முதல் விண்வெளி வீராங்கனை - கல்பனா சாவ்லா
13. முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நாடு - ரஷ்யா, ஆண்டு 1961
14. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் பெயர் - பிர்
15. இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய முதல் செயற்கைகோள் - ஆரிய பட்டா
16. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பயணம் செய்த விண்வெளிக்கலம் - சோயூஸ் T2
17. முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற மனிதர் - யூரி காசரின்
18. மனிதன் முதன் முதலில் நிலவிற்குச் சென்ற ஆண்டு - 1969
19. முதன் முதலில் நிலவில் காலடி வைத்த மனிதர் - நீல் ஆம்ஸ்ட்ராங்
20. இந்தியா நிலாவிற்கு விண்வெளி கலத்தை அனுப்பிய ஆண்டு - 2008
21. இந்தியா முதன் முதலில் நிலவிற்கு அனுப்பிய விண்வெளி கலத்தின் பெயர் - சந்திராயன் 1
22. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பயணம் செய்த விண்வெளிக் கலம் - கொலம்பியா
23. கர்நாடக மாநிலம் கோலாரில் கிடைப்பது - தங்கம்
24. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் - ராகேஷ் சர்மா
25. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா விண்வெளியில் பயணம் செய்த ஆண்டு - 1984
26. ஆபரணங்கள் செய்யப் பயன்படுவது - தங்கம்
27. கர்நாடக மாநிலம் கோலாரில் கிடைப்பது - தங்கம்
28. கண்ணாடித் தொழிற்சாலையில் பயன்படுவது - மாங்கனீசு
29. வரலாற்றின் உயிர்நாடி - காலம்
30. இந்திய தேசியக் காங்கிரஸ் தொடங்கப்பட்ட வருடம் - 1885
31. சமுதாய உணர்வை குழந்தைகளிடம் வளர்ப்பது - குடும்பம் - பள்ளி