21. கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை - 1260
22. அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை - சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
23. ஒரு கரு இரட்டையர் பற்றி ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க பல்கலைக்கழகம் - அயோவா
24. சூழ்நிலை தாக்கத்தால் அமெரிக்காவில் கலிபோர்னியா கடற்கரையின் ஓரம் வசித்து வரும் சீனர்கள் தங்களிடையே மட்டும் திருமண உறவு வைத்துக் கொள்ள உறுதி செய்தனர்.
25. அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு - சிந்தனை
26. ஆரம்பக் கல்வி வயதினர் - பின் குழந்தைப் பருவம்
27. ஒப்பர் குழு என்பது - சமவயது குழந்தைகள்
28. அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது - உள்ளம்.
29. உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன - பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம் ஆகியன
30. குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது - பாராட்டும், ஊக்கமும் அளித்தல்
31. தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது - தன் தூண்டல்
32. சிக்கலான மனவெழுச்சி - பொறாமை
33. மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி
34. அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் - மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
35. வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது - பேசுதல்
36. மிகை நிலை மனம் ஏற்படும் வயது - 3-6
37. அடிப்படை மனவெழுச்சி - சினம்
38. மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக : கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
39. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை
40. குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.
0 Comments:
Post a Comment