Saturday, August 11, 2012

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 4

போலி:
1. மூன்று வகைப்படும். 1.முதற்போலி, 2. இடைப்போலி, 3.இறுதிப்போலி.

2. முதற்போலி:  ஒரு சொல்லின் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது வருவது முதற்போலி - எ.டு. மஞ்சு - மைஞ்சு; மயல் - மையல்.
3. இடைப்போலி : ஒரு சொல்லின் இடையெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இடைப்போலி. எ.டு. முரசு - முரைசு, அரசியல் - அரைசியல்.
4. இறுதிப்போலி: ஒரு சொல்லின் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இறுதிப்போலி (கடைப்போலி என்பர்) - எ.டு. - அறம் - அறன், பந்தல் - பந்தர்.
ஓவியம்:
5. ஓவியக் கலைக்கு மற்ற பெயர்கள்: ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி.
6. ஓவியக் கலைஞர்களின் மற்ற பெயர்கள்: ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்.
7. ஓவியக் கலைஞரின் குழுவின் பெயர் - ஓவிய மாக்கள்; ஆண் ஓவியர் - சித்திராங்கதன், பெண் ஓவியர் - சித்திரசேனா.
8. ஓவியம் வரையும் இடம்: சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்.
அகரமுதலி:
9. அகராதி என்னும் சொல் தற்போதைய வழக்கில் அகரமுதலி என வழங்கப்படுகிறது.
10. தமிழ் அகரமுதலி வரலாற்றில் செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாகும்.
11. நிகண்டுகளின் பழமையானது - சேந்தன் திவாகரம்.
12. சேந்தன் திவாகரத்தின் ஆசிரியர் - திவாகரர்.
13. மொத்த நிகண்டுகளின் எண்ணிக்கை - 25
14. நிகண்டுகளின் சிறப்பானது - சூடாமணி நிகண்டு
15. சூடாமணி நிகண்டுவை இயற்றியவர் - மண்டலப்புருடர்
16. வீரமாமுனிவர் தொகுத்த சதுரகாதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
17. சதுரகாதி வெளிவந்த ஆண்டு - கி.பி.1732.
18. சதுரகாதியில் பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாகப் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
19. தமிழ் - இலத்தீன் அகராதி, இலத்தீன் - தமிழ் அகராதி, தமிழ் - பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு - தமிழ் அகராதி, போர்த்துக்கீசிய - இலத்தின் தமிழ் அகராதி ஆகிய அகர முதலிகளை உருவாக்கியவர் வீரமாமுனிவர்.
20. தமிழ் - தமிழ் அகராதி லெவி - ஸ்பால்டிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
Previous Post
Next Post

0 Comments: