Tuesday, September 11, 2012

TNPSC GROUP 4 தமிழ் இலக்கணம் - உரிச்சொல்

உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும்
சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.

உரிச்சொல் இருவகைப்படும்
* ஒரு பொருள் குறித்த பல சொல்
* பல பொருள் குறித்த ஒரு சொல்

எ.கா
ஒரு பொருள் குறித்த பல சொல்
* சாலப் பேசினான்.
* உறு புகழ்.
* தவ உயர்ந்தன.
* நனி தின்றான்.
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.

பல பொருள் குறித்த ஒரு சொல்
* கடிமனை - காவல்
* கடிவாள் - கூர்மை
* கடி மிளகு - கரிப்பு
* கடிமலர் - சிறப்பு
இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்
Previous Post
Next Post

0 Comments: