Thursday, November 1, 2012

2.1 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே நடவடிக்கை


   மத்திய அரசுக்கு சொந்தமான ரயில்வே துறையில் பாதுகாப்பு தொடர்பான பிரிவுகளில் 90 ஆயிரம் பணியிடங்கள் உட்பட 2.1 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்‌வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகின் மிகப் பெரிய துறை‌களில் ஒன்றாக விளங்கும் இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு பிரிவு சம்பந்தமான லோகோ ரன்னிங் ஸ்டாப், ஓட்டுனர்,ஸ்டேஷன் மாஸ்‌டர், கார்டுகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிக்னல் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் பராமரிப்பு அதிகாரிகள் என பல்வேறு பிரிவுகளில் காலிபணியிடங்கள் உள்ளன. 
இதற்குத் தேவைப்படும் பணியாளர்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக சுமார் 2.6 லட்சம் காலி பணியிடங்கள் இருந்தன. அவை தற்போது 2.1 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆறு மாத கால இ‌டைவெளியில் 1.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும் பாதுகாப்பு தொடர்பான பணியிடங்களில் குரூப் சி பிரிவிற்கு 32 ஆயிரம் பேர்களும், குரூப் டி பிரிவிற்கு 85 ஆயிரம் பேர்கள் வரை தேர்வு மூலம் தேர்ந்தெடு்க்கப்பட உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளில் குரூப் சி மற்றும் குரூப் டி பாதுகாப்பு பிரிவில் சுமார் 84 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Previous Post
Next Post

0 Comments: