Thursday, November 8, 2012

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு இயற்பியல் வினாக்கள்

1. ஒரு குதிரைத்திறன் என்பது

அ. 946 வாட்
ஆ. 846 வாட்
இ. 746 வாட்
ஈ. 646 வாட்

2. வௌவால் ஏற்படுத்துவது

அ. குற்றொலி
ஆ. மீயொலி
இ. செவி உணர் ஒலி
ஈ. அனைத்தும் தவறு
3. மனிதன் மற்றும் சில விலங்குகளின் ஒலி உணரும் திறனை (ஹெர்ட்ஸ்) பொருத்துக:

I. மனிதன் - 1. 1000 - 1,00,000
II. யானை - 2. 100 - 32,000
III. பூனை - 3. 20 - 20,000
IV. கொறி விலங்குகள் - 4. 16 - 12,000

அ. I-3 II-1 III-2 IV-4
ஆ. I-3 II-4 III-1 IV-2
இ. I-3 II-2 III-1 IV-4
ஈ. I-3 II-4 III-2 IV-1
4. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும்

அ. மாயபிம்பம்
ஆ. மெய்பிம்பம்
இ. பொய்பிம்பம்
ஈ. மாய மற்றும் மெய்பிம்பங்கள்
5. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்

அ. பரப்பு இழுவிசை
ஆ. ஈர்ப்பு விசை
இ. மைய நோக்கு விசை
ஈ. மைய விலக்கு விசை
6. முதன்மை நிறங்கள்

அ. சிவப்பு, பச்சை, நீலம்
ஆ. பச்சை, சிவப்பு, கருப்பு
இ. சிவப்பு, பச்சை, வெள்ளை
ஈ. கருப்பு, மஞ்சள், நீலம்
7. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம்

அ. காற்று
ஆ. ஆக்சிசன்
இ. நீர்
ஈ. சூரியன்
8. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை

அ. 9.9 N
ஆ. 9.10 N
இ. 9.8 N
ஈ. 9.11 N
9. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும்

அ. சமமாக இருக்கும்
ஆ. தண்ணீரின் அளவை பொறுத்து மாறுபடும்
இ. பாத்திரத்தின் அளவை சார்ந்து வேறுபடும்
ஈ. மேற்கூறிய எதுவும் சரியில்லை
10. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம்

அ. 20 கி.மீ.
ஆ. 18 கி.மீ.
இ. 25 கி.மீ.
ஈ. 30 கி.மீ.

11. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தது

அ. கேபிள்
ஆ. ரேடியோ அலைகள்
இ. மைக்ரோ அலைகள்
ஈ. ஆப்டிகல் பைபர்
12. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்?

அ. ஸ்டீபன்ஸன்
ஆ. ஜேம்ஸ்வாட்
இ. மெக்ஆடம்
ஈ. ராவ்லண்ட் ஹில்ஸ்
13. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம்

அ. பெட்ரோலியம்
ஆ. நிலக்கரி
இ. இயற்கை வாயு
ஈ. சூரியன்
14. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்

அ. சுழற்சி இயக்கம்
ஆ. வேக இயக்கம்
இ. நேர்கோட்டு இயக்கம்
ஈ. அலை இயக்கம்
15. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும்

அ. எடை அதிகமான பொருள் முதலில் விழும்
ஆ. அவை ஒரே நேரத்தில் விழும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு
16. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர்

அ. மார்ஷல் டாப்ளர்
ஆ. ஸ்டீபன் டாப்ளர்
இ. ஐசக் டாப்ளர்
ஈ. கிறிஸ்டியன் டாப்ளர்
17. ஒலிப்பதிவு செய்யும் ஒலி நாடாவில் உள்ளது
அ. இரும்பு ஆக்ஸைடு
ஆ. குரோமியம் டை ஆக்ஸைடு
இ. இரண்டும் இருக்கும்
ஈ. மேற்சொன்ன இரண்டில் ஒன்று
18. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய

அ. 150 கி.மீ
ஆ. 200 கி.மீ
இ. 250 கி.மீ
ஈ. 300 கி.மீ
19. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்

அ. காலங்களின் விதி
ஆ. பரப்புகளின் விதி
இ. சுற்றுப்பாதைகளின் விதி
ஈ. தொலைவுகளின் விதி
20. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும்

அ. உட்கவரும்
ஆ. எதிரொளிக்கும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு

21. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை

அ. 100o C
ஆ. 110o C
இ. 120o C
ஈ. 130o C
22. ஒரு மின் விளக்கின் ஆயுள்

அ. 1,000 மணிகள்
ஆ. 1,500 மணிகள்
இ. 2,000 மணிகள்
ஈ. 2,500 மணிகள்
23. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்

அ. வலக்கை பெருவிரல் விதி
ஆ. மின்காந்த தூண்டல்
இ. காந்த தூண்டல்
ஈ. இடக்கை விதி
24. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு
அ. ஆவியாதல்
ஆ. உருகுதல்
இ. உறைதல்
ஈ. பதங்கமாதல்
25. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்
அ. திரவத்தின் நடுப்பகுதியில்
ஆ. திரவத்தின் அடிப்பகுதியில்
இ. திரவத்தின் மேற்பரப்பில்
ஈ. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்
26. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி
அ. வேகமாக பரவும்
ஆ. மெதுவாக பரவும்
இ. மாற்றம் இல்லை
ஈ. அனைத்தும் தவறு

விடை: 1. இ 2. ஆ 3. ஈ 4. அ 5. அ 6. அ 7. ஈ 8. இ 9. அ 10. ஆ 11. ஈ 12. ஆ 13. ஈ 14. இ 15. ஆ 16. ஈ 17. ஈ 18. ஆ 19. இ 20. அ 21. இ 22. அ 23. ஆ 24. ஈ 25. இ 26. அ
Previous Post
Next Post

0 Comments: