Monday, October 22, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 195

1. 38வது இணைக்கோட்டு எல்லை என அழைக்கப்படுவது எந்த நாடுகளுக்கிடையேயான
எல்லை?
அ. போலந்து, ஜெர்மனி
ஆ. இந்தியா, சீனா
இ. வடக்கு மற்றும் தெற்கு கொரியா
ஈ. அமெரிக்கா, கனடா
2. இந்திய 5 ஆண்டுத் திட்ட முன்னோடி என அழைக்கப்படுவது யார்?
அ. ஜவகர்லால் நேரு    ஆ. தேஸ்முக்
இ. பி.சி.மகலனோபிஸ்  ஈ. சர்தார் பல்வந்த் சிங்
3. பப்ளிக் பிராவிடன்ட் பண்ட் என அழைக்கப்படும் பொது சேமிப்பு முறையின் கீழ் ஒருவர் எவ்வளவு அதிகமாக சேமிக்க முடியும்?
அ. ரூ.70000            ஆ. ரூ.ஒரு லட்சம்
இ. ரூ.1.20 லட்சம்    ஈ. ரூ.1.5 லட்சம்
4. 2012ம் ஆண்டில் நமது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவிருக்கும் நபர் எந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் மற்றும் இளைய வயது பிரதமர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார்?
அ. தாய்லாந்து    ஆ. கம்போடியா
இ. மியான்மர்      ஈ. வியட்னாம்
5. பின்வரும் நாடுகளில் எது சமீபத்தில் நமக்கு முதன் முதலாக யுரேனியம் தருவதாக அறிவித்துள்ளது?
அ. கஸகஸ்தான்     ஆ. ஆஸ்திரேலியா
இ. கனடா                ஈ. பிரான்ஸ்
6. இந்தியாவின் மிகப் பெரிய சோலார் பவர் ஆலையை எந்த மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமம் நிறுவவுள்ளது?
அ. தமிழ்நாடு           ஆ. ராஜஸ்தான்
இ. ஆந்திரபிரதேசம்  ஈ. இவை எதுவுமில்லை
7. சமீபத்தில் 500 டெஸ்ட் கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் என்னும் பெருமையைப் பெற்றவர் யார்?
அ. எம்.எஸ்.தோனி ஆ. சங்ககாரா
இ. மார்க் பவுச்சர் ஈ. இவர் எவருமில்லை
8. பஞ்சாபில் சமீபத்தில் நடைபெற்ற உலக கபாடி சாம்பியன் போட்டிகளில் பட்டம் வென்ற நாடு எது?
அ. பாகிஸ்தான் ஆ. இந்தியா
இ. கனடா          ஈ. இவை எதுமில்லை
9. மரியோ மான்டி என்பவர் எந்த நாட்டின் பிரதமராக சமீபத்தில் பதவியேற்றுள்ளார்?
அ. இத்தாலி   ஆ. பிரான்ஸ்
இ. ஸ்பெயின்  ஈ. மோனாகோ
10. 2018ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி எங்கு நடைபெறவுள்ளது?
அ. கனடா             ஆ. இங்கிலாந்து
இ. ஆஸ்திரேலியா ஈ. நியூசிலாந்து
விடைகள்:
1. இ   2. இ   3. ஆ   4. அ    5. ஆ  6. ஆ   7. இ  8. ஆ  9. அ   10. இ
Previous Post
Next Post

1 Comments:

vidhya loganathan said...

மிகவும் பயனாக உள்ளது. நன்றி
http://tnpscmaster.blogspot.com/