Thursday, November 8, 2012

அதிக மதிப்பெண் பெற எளிதான வழி முறைகள்

பள்ளிப் பருவம் முதல் கல்லுõரி வரை, மாணவர் களுக்கு எழும் கேள்வி, எப்படி படிப்பது?, எப்படி அதிக மார்க் எடுப்பது என்பதுதான். சில மாணவர்கள்
கஷ்டப்பட்டு படிப்பர், அதிக மதிப்பெண்ணும் பெறுவர். சிலர் சுமாராக படிப்பர். ஆனாலும், தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து விடுவர்.

சிலர் என்னதான் கஷ்டப்பட்டு படித்தாலும், அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. இதற்கு காரணம், எப்படி படிக்க வேண்டும் என அவர்களுக்கு தெரிவதில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில், தேர்வுக்கு தயாராகின்றனர். எப்படி படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

* வெற்றி பெறுவதற்கு, குறுக்கு வழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

* தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

* ஒவ்வொரு பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்துக்கு அதிக நேரமும், எளிதான பாடத்துக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். தொடர்ந்து படிக்காமல், இடையிடையே ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு முறையும் ஈடுபாட்டோடு படிக்க முடியும்.

* படிக்கும் இடம் முக்கியமானது. அமைதியான இடமாக இருக்க வேண்டும். ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருக்கும் போது, மற்ற புத்தகங்கள் உங்கள் பார்வையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் கவனம் சிதறாமல் ஒரே பாடத்தை படிக்க முடியும்.

* அதிகாலை படிப்பது நல்லது. அப்போது, உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருக்கும். இது உங்களை படிக்க துõண்டும். படிக்கும் அறையில், கண்ணாடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது கவனத்தை சிதறச் செய்யும். கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி அமர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு, பாசிடிவ் எனர்ஜியை தரும்.

* படிக்கும் போது, குறிப் பெடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் அனைத்து பாடத்தையும் திரும்ப படிக்க முடியாது. அந்த தருணத்தில், குறிப்பேடு பயன் தரும்.

* நன்றாக சாப்பிட வேண்டும். சத்தான உணவு உண்ணுவது அவசியம். அதே போல, போதிய துõக்கம் அவசியம். இரவு முழுவதும், விழித்திருந்து படிப்பது தவறு. நன்றாக உறங்கினால் தான், அடுத்த நாள் தேர்வை ஒழுங்காக எழுத முடியும்.

* கேள்விக்கு எப்படி பதிலளிப்பது, என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வர். அப்படி இருக்கும் போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். கையெழுத்து நன்றாக இருப்பது அவசியம்.

* படிக்கச் சொல்லி தொந்தரவு செய்கிறார்களே என ஒருபோதும் மாணவர்கள் எண்ணக் கூடாது. நீங்கள் படிப்பது, அவர்களுக்காக அல்ல; உங்களுக்காகத்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

* தேர்வில் எக்காரணம் கொண்டும் மோசடியில் ஈடுபடாதீர். இது உங்கள் வாழ்க்கையை, ஏதாவது ஒரு வழியில் பாதிக்கும்.

* கடவுள் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். நிச்சயம் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

* தேர்வு முடிந்ததும், அதைப் பற்றி பிற மாணவர்களுடன் விவாதிக்காதீர்கள். இது அடுத்த தேர்வுக்கு தயாராவதை பாதிக்கும். அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் மட்டுமே, எழுதிய தேர்வை பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.

Tuesday, November 6, 2012

2006ல் ABL மாதிரி பள்ளி

2006ல் ABL மாதிரி பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் விவரங்களையும் அப்பள்ளிகளின் தற்போதும் மாதிரிப்பள்ளிகளாக இயங்குகிறதா என்ற விவரத்தையும் , வழங்கப்பட்ட ABL அட்டைகளின் விவரங்களையும் கோரி - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

மேல்நிலைப் பொது தேர்வுக்கான புகைப்படத்துடன் கூடிய மாணவ / மாணவியர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை

பள்ளிக்கல்வித்துறை - மேல்நிலைப் பொது தேர்வுக்கான புகைப்படத்துடன் கூடிய மாணவ / மாணவியர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை

Monday, November 5, 2012

ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கால அட்டவணையில் பயின்ற இரு பட்டப்படிப்புகள்

ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கால அட்டவணையில் பயின்ற இரு பட்டப்படிப்புகள் ( இளங்கலையோ, முதுகலையோ, இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்போ) பதவியுயர்வுக்கு தகுதி உண்டு - பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமை சட்ட கடிதம்

அறிவியல் செய்முறை பயிற்சி

அறிவியல் செய்முறை பயிற்சியினை முழுமையாக 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு செயல்படுத்த அறிவுரைகள் வழங்கி - RMSA திட்ட இயக்குனர் செயல்முறை

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் / உதவியாளர் பணியிடங்களை அருகாமையில் உள்ள உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி பணியாளர்களைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

ஆர்.டி.இ.,: அவகாசம் நீட்டிப்பு...

  மத்திய அரசு 2009ம் கொண்டு வந்த ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி என்ற சட்டத்தை, அமல்படுத்துவதற்கான அவகாசம், மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

   ஆர்.டி.இ., சட்டம், நாட்டில் உள்ள 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும், இலவச கட்டாய அடிப்படை கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது. இந்தியா முழுவதும் 13 லட்சம் துவக்கப் பள்ளிகள் உள்ளன. பள்ளி கட்டடங்கள், வகுப்பறைகள், நாற்காலிகள், குடிநீர், டாய்லெட், விளையாட்டு மைதானம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் என ஒன்பது அடிப்படை வசதிகளை, நுõறு சதவீதம் அனைத்து பள்ளிகளிலும் நிறைவேற்றி இருக்க வேண்டும் எனவும்; ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
   மத்திய அரசு, இதை நிறைவேற்றுவதற்கு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, 2013 மார்ச் 31ம் தேதி காலக்கெடு விதித்திருந்தது. இருப்பினும், இக்கெடுவுக்கள் பெரும்பாலான பள்ளிகள், அதை நிறைவேற்றவில்லை.
   சமீபத்தில், நாடு முழுவதும் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், 95 சதவீத பள்ளிகள், இச்சட்டத்தில் குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என தெரிவித்தது. நாட்டில் உள்ள 10 பள்ளிகளில் ஒன்றில் தான், குடிநீர் வசதி செய்யப் பட்டுள்ளதாகவும், ஐந்து பள்ளிகளில், இரண்டில் டாய்லெட் வசதியே இல்லை எனவும், ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவித்தது. 
    இந்நிலையில் காலக்கெடு, மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய காலக்கெடுவாக, 2015 மார்ச் 31ம் தேதியை, மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

Sunday, November 4, 2012

கல்வி உரிமை சட்டம் 2013ல் முழுமையாக அமலாகும்: பல்லம் ராஜு-


கல்வி உரிமை சட்டம், 2013ம் ஆண்டில் , முழுவதும் அமலாகும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜூ கூறினார்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வந்திருந்த எம்.எம்.பல்லம் ராஜூ, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2010ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தினை கொண்டு வந்தது. 
மேலும் கல்வித்துறை , தகவல் தொழிலநுட்ப கொள்கையை மேம்படுத்துவற்கான திட்டவரைவினை தயார் செய்யப்பட்டது. அதனடிப்படையில் 2013-ம் ஆண்டிற்குள் கல்வி உரிமை சட்டம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Post Graduate Teacher (English & Commerce) (Post Code :3012)

Friday, November 2, 2012

பச்சை நிற மை பயன்பாடு குறித்து தெளிவுரை

பச்சை நிற மை பயன்பாடு குறித்து தெளிவுரை, ஊழியர்களின் வகைகள் மற்றும் "பி" பிரிவு ஊழியர்கள் பச்சை நிற மையை பயன்படுத்த அதிகாரம் வழங்கி முக்கிய அரசாணைகள்

தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி

தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளின் விலையில்லா சீருடைகள் வழங்குவது குறித்து விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

மைய அரசின் திட்டம் (IDMI)

மைய அரசின் திட்டம் (IDMI) - நிதி உதவி கோரி சிறுபான்மையினத்தவர்களால் நடத்தப்படுகின்ற பள்ளிகளிலிருந்து பெறப்படுகின்ற கருத்துருக்களை பரிசீலினை செய்து அனுப்ப கோருதல் தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள்

கையெழுத்துப் பயிற்சி

ராய்பூரில் 21 முதல் 28.11.12 வரை நடைபெறும் கையெழுத்துப் பயிற்சிக்கு 30 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் மற்றும் அவர்கள் பங்கேற்க அனுமதியளித்து - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

தூய்மையான இந்தியாவை உருவாக்கிட, தூய்மை மேம்பட்ட உறுதிமொழியை தினமும் பள்ளி பிராத்தனைக்கு பிறகு எடுக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

தூய்மையான இந்தியாவை உருவாக்கிட, தூய்மை மேம்பட்ட உறுதிமொழியை தினமும் பள்ளி பிராத்தனைக்கு பிறகு எடுக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

நேர்முக உதவியாளர் பணி

நேர்முக உதவியாளர் பணியிடம் முதல் துப்புரவுப் பணியாளர் பணியிடம் முதற்கொண்டு காலிப்பணியிட விவரம் கோரி - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

15.03.2012 நிலவரப்படி உதவியாளர் பணியிலிருந்து (இருக்கைப்பணி) கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்குவதற்கான முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

பள்ளிகல்வித் துறையின் - மாணவர்களுக்கான நல்லொழுக்க சிந்தனைகள்

Thursday, November 1, 2012

மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் அறிமுகம்


மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் குறித்து வாழ்வியல் திறன் விளக்கம் தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 9ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி என்ற தலைப்பில், 10 கட்டளைகள் விளக்கம் தரப்படுகிறது.

மாணவர்களுக்கு விளக்கம் தர, ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.
10 கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல் திறன், கூர்சிந்தனை திறன், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன், உணவுர்களை கையாளும் திறன், தன்னை அறிதல், முடிவெடுக்கும் திறன், தகவல் தொடர்பு திறன். 
திண்டுக்கல்லில் நடந்த பயிற்சி வகுப்புகளில் மேற்கூறிய இந்த 10 கட்டளைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.