Thursday, November 8, 2012

ஆசிரிய தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்றும், தொடர்ந்து நடக்கிறது. வரும், 8, 9ம் தேதிகளில், முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.


இம்மாதம், 2ம் தேதி வெளியான, டி.இ.டி., தேர்வு முடிவில், 19 ஆயிரத்து 246 பேர், தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 10 ஆயிரத்து 397 பேர், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். மீதமுள்ள, 8,849 பேர், பட்டதாரி ஆசிரியருக்கான, இரண்டாம் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள்.

இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இரு நாளும் சேர்த்து, 417 பேர், பங்கேற்கின்றனர். 10 குழுக்களைச் சேர்ந்த அலுவலர்கள், சான்றிதழ்களை சரிபார்க்கின்றனர். இதில், சென்னை மாவட்டத்தில், 572 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பணிகள் முடிந்த பின், இறுதி தேர்வுப் பட்டியலில், எத்தனை பேர் இடம்பெற்றுள்ளனர் என்ற விவரம் தெரியவரும். உரிய சான்றிதழ் இல்லாத தேர்வர்கள், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியல் அடங்கிய கோப்புகளை, கல்வித்துறைக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பும்.

அதன்பின், சம்பந்தபட்ட ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடக்கும். டிசம்பர் இறுதிக்குள், 19 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, November 5, 2012

TNTET - தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு கிடையாது:ஏப்ரல் அல்லது ஜுனில் அடுத்த டி.இ.டி தேர்வு


"டி.இ.டி., மறுதேர்வு முடிவு, வெளியிடப்பட்ட நிலையில், தகுதி மதிப்பெண் குறைப்பிற்கு வாய்ப்பு கிடையாது" என, துறை வட்டாரங்கள், உறுதியாக தெரிவித்தன. அடுத்த டி.இ.டி., தேர்வு, ஏப்ரல் அல்லது ஜூனில் நடக்கும் எனவும், துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டும் எனில், டி.இ.டி., எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில், குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். 150 மதிப்பெண்களுக்கு நடக்கும் தேர்வில், 90 மதிப்பெண்கள் எடுத்தால், பணி நியமனத்திற்கு தகுதி பெறுகின்றனர்.
ஆனால், தேவையை விட, அதிகமானோர் தேர்ச்சி பெற்றால், மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுவர். ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதே, குதிரைக் கொம்பாக இருந்தது. 6.67 லட்சம் பேர் எழுதியதில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இதனால், தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை பெற்றாலே, வேலை உறுதி என்பதுதான், தற்போதைய நிலை. இந்நிலையில், தேர்ச்சி சதவீதம் குறைந்தால், ஆசிரியர்களை தேர்வு செய்வதில், பெரும் சிக்கல் எழும் நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக, சட்டசபையில் பேசிய, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, "தேர்ச்சி சதவீதத்தின் நிலையைப் பொறுத்து, முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பார்,&'&' என தெரிவித்தார். இதனால், தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமோ என்ற, எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், நேற்று வெளியான தேர்வு முடிவில், 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். "முதல் தாள் தேர்வில், தேவையை விட, 3,000 பேர் கூடுதலாகவும், இரண்டாம் தாள் தேர்வில், பற்றாக்குறை நிலை இருந்தாலும், தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு கிடையாது" என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து, துறை வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர், 7,000 பேர் தேவை. ஆனால், 10 ஆயிரத்து, 397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர், 20 ஆயிரம் பேர் தேவை. இதில், 8,849 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்; இதில், பற்றாக்குறை உள்ளது.
எனினும், ஏப்ரல் அல்லது ஜூனில் நடக்கும், அடுத்த டி.இ.டி., தேர்வு மூலம், பற்றாக்குறை சரியாகிவிடும். எனவே, தகுதி மதிப்பெண்களை குறைக்கும் எண்ணம் இல்லை. இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

டி.இ.டி., மறுதேர்வு முடிவு வெளியீடு:இந்த முறை 3 சதவீதம் பேர் தேர்ச்சி-ஒரு பார்வை



டி..டி., மறுதேர்வு முடிவை, டி.ஆர்.பி., நேற்று மாலை வெளியிட்டது. ஜூலையில் நடந்த தேர்வில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போதைய தேர்வில், 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.ஜூலையில் நடந்த முதல் டி..டி., தேர்வை, 6.67 லட்சம் பேர் எழுதினர். இதில், வெறும், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

பல தரப்பில் இருந்தும், விமர்சனம் எழுந்ததால், அக்டோபர், 14ல் நடந்த டி..டி., மறுதேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கியதுடன், கேள்வித்தாள் மிகக் கடினமாக இல்லாத வகையிலும், டி.ஆர்.பி., பார்த்துக் கொண்டது. இதன் காரணமாக, தேர்ச்சி சதவீதம், ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என, டி.ஆர்.பி., எதிர்பார்த்தது.
தேர்ச்சி பெற்றோர்:நேற்று மாலை வெளியான தேர்வு முடிவில், 3 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. முதல் தாள் தேர்வில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 8,849 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இந்த, 19 ஆயிரத்து 246 பேரும், நிர்ணயிக்கப்பட்ட, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலிப்பணியிடங்கள் 18 ஆயிரம் உள்ளது. அதனால் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 8849 பேர் மட்டுமே உள்ளதால் இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும். அதே நேரத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 7 ஆயிரத்து 500 மட்டுமே உள்ளதால் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைக்கும்.வேலைக்காக சான்றிதழ் சரிபார்ப்பு 6ந்தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க உள்ளது. அவர்களுக்கு அழைப்புக்கடிதம் எதுவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து அனுப்பப்பட வில்லை. அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ள அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்துகொள்ளவேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு:தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 6முதல் 9ம் தேதி, 32 மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதங்களை, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. வீட்டு முகவரிக்கு, அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட மாட்டாது.தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களுடன், சுய கையொப்பம் இட்ட இரண்டு செட் நகல் சான்றிதழ்களுடன், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள், கூடுதலாக, சமீபத்திய வேலைவாய்ப்பு பதிவு அட்டையை, எடுத்துச்செல்ல வேண்டும்.
இணையத்தில் வெளியீடு:தேர்வு முடிவுகள், இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.t.ணடிஞி.டிண), நேற்றிரவு வெளியிடப்பட்டன. தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்தால், மதிப்பெண்களுடன் கூடிய, தேர்வு முடிவுகளை அறியலாம்.
*
தேர்வு முடிவு-முழு விவரம்
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34
மொத்தம்
எழுதியோர்-6,56,698
தேர்ச்சி பெற்றோர்-19,246
சதவீதம்-2.93
ஜூலை தேர்வை எழுதியோர்-6,67,483
தேர்ச்சி பெற்றோர்-2,448
சதவீதம்-0.33

(ஆசிரிய பெருமக்கள் , தயவு கூர்ந்து புதிய தகவல்கள் , விழிப்புணர்வு மற்றும் வாழ்த்துக்கள் போன்ற ஆரோக்கியமான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் )

Sunday, November 4, 2012

டி.இ.டி. மறுதேர்வு முடிவு வெளியீடு: 3% பேர் தேர்ச்சி


    டி.இ.டி., மறுதேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. ஜூலையில் நடந்த தேர்வில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போதைய 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

   ஜூலையில் நடந்த முதல் டி.இ.டி., தேர்வை, 6.67 லட்சம் பேர் எழுதினர். இதில், வெறும், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
   பல தரப்பில் இருந்தும், விமர்சனம் எழுந்ததால், அக்டோபர், 14ல் நடந்த டி.இ.டி., மறுதேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கியதுடன், கேள்வித்தாள் மிகக் கடினமாக இல்லாத வகையிலும், டி.ஆர்.பி., பார்த்துக் கொண்டது. இதன் காரணமாக, தேர்ச்சி சதவீதம், ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என, டி.ஆர்.பி., எதிர்பார்த்தது.
   நேற்று மாலை வெளியான தேர்வு முடிவில், 3 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. முதல் தாள் தேர்வில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 8,849 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இந்த, 19 ஆயிரத்து 246 பேரும், நிர்ணயிக்கப்பட்ட, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
   தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 6ம் தேதி, 32 மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதங்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. வீட்டு முகவரிக்கு, அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட மாட்டாது.
   தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களுடன், சுய கையொப்பம் இட்ட இரண்டு செட் நகல் சான்றிதழ்களுடன், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள், கூடுதலாக, சமீபத்திய வேலைவாய்ப்பு பதிவு அட்டையை, எடுத்துச்செல்ல வேண்டும்.
   தேர்வு முடிவுகள், இணையதளத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டன. தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்தால், மதிப்பெண்களுடன் கூடிய, தேர்வு முடிவுகளை அறியலாம்.

TN-TET Supplementary Examination - Oct 2012 - Candidates CERTIFICATE VERIFICATION Query


 Paper 2 : 8793 Candidates

 Paper 2 C.V 06.11.2012 and 07.11.2012, Timing: 10.00 a.m                    

Paper 1 : 10187 Candidates

Paper 1 C.V 08.11.2012 and 09.11.2012 , Timing: 10.00 a.m

 Certificate Verification done in : 32 Districts  

Please Click Here Instruction for Certificate Verification - Paper 1                           
Please Click Here Instruction for Certificate Verification - Paper 2
Please Click Here Bio-Data Form
Please Click Here Identification Form

Friday, November 2, 2012

ஆசிரியர் தகுதி மறுத்தேர்வு அக்டோபர் 2012 முடிவுகள் வெளியீடு


ஆசிரியர் தகுதி மறுத்தேர்வு அக்டோபர் 2012 முடிவுகள் தற்போது வெளியடப்பட்டது. அதில் 
இடைநிலை ஆசிரியர்கள் 10,394 பெரும் 
பட்டதாரி ஆசிரியர்கள் 8,849 பெரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தனி நபருக்கான தேர்வு முடிவுகளை நம் இணையதளத்தில் இன்று இரவு 11.00 மணிக்கு காணலாம்.

எதிர்பார்த்ததை போலவே 1% குறைவாக தேர்ச்சி விகிதம் அமைந்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை அனைவருக்கும் பணி நியமன வாய்ப்புள்ளது. மேலும் விரிவான கட்டுரை விரைவில் ... 

உங்கள் கருத்துகளையும் விவாதங்களையும் கிழே பதிவு செய்யுங்கள்!...

Thursday, November 1, 2012

ஆசிரிய தகுதி தேர்வில் ஆசிரியர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

பிளஸ் டூ தேர்வுக்கு 15 மதிப்பெண்களும் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்படும். அதாவது, இந்த மூன்று தேர்வுகளையும் சேர்த்து  மொத்தம் நூறு மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று கணக்கிடப்படும்.


பிளஸ் டூ தேர்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
90 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 15 மதிப்பெண்கள்
80 சதவீதத்துக்கு மேலும் 90 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 12 மதிப்பெண்கள்
70 சதவீதத்துக்கு மேலும் 80 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 9 மதிப்பெண்கள்
60 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால்- 6 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்கு மேலும் 60 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால்- 3 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்குக் கீழ் மதிப்பெண்கள் பெற்றால் - 0 மதிப்பெண்கள்

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ தேர்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் - 25 மதிப்பெண்கள்
50 முதல் 70 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற்றால் - 20 மதிப்பெண்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
90 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 60 மதிப்பெண்கள்
80 சதவீதத்துக்கு மேலும் 90 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 54 மதிப்பெண்கள்
70 சதவீதத்துக்கு மேலும் 80 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 48 மதிப்பெண்கள்
60 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 42 மதிப்பெண்கள்

பட்டதாரி ஆசிரியர்கள் பணி
பிளஸ் டூ தேர்வுக்கு 10 மதிப்பெண்களும் பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்களும் பிஎட் தேர்வுக்கு 15 மதிப்பெண்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும். அதாவது, இந்த நான்கு தேர்வுகளையும் சேர்த்து நூறு மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று கணக்கிடப்படும்.

பிளஸ் டூ தேர்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
90 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 10 மதிப்பெண்கள்
80 சதவீதத்துக்கு மேலும் 90 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 8 மதிப்பெண்கள்
70 சதவீதத்துக்கு மேலும் 80 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 6 மதிப்பெண்கள்
60 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 4 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்கு மேலும் 60 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 2 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்குக் கீழ் மதிப்பெண்கள் பெற்றால் - 0 மதிப்பெண்கள்

இளநிலைப் பட்டப் படிப்புக்கு எத்தனை மதிப்பெண்கள்?
70 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 15 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்கு கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 12 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்குக் கீழ் மதிப்பெண்கள் பெற்றால் -  10

பிஎட் பட்டப் படிப்புக்கு எத்தனை மதிப்பெண்கள்?
70 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 15 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்கு கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 12 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்குக் கீழ் மதிப்பெண்கள் பெற்றால் - மதிப்பெண்கள் கிடையாது

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
90 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 60 மதிப்பெண்கள்
80 சதவீதத்துக்கு மேலும் 90 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 54 மதிப்பெண்கள்
70 சதவீதத்துக்கு மேலும் 80 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 48 மதிப்பெண்கள்
60 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 42 மதிப்பெண்கள்

Wednesday, October 31, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினா விடைகள்

1. இலக்கிய இலக்கணங்கள் உள்ள மொழிகளில் உள்ள மூன்று வித அமைப்புகள் : தனிநிலை, ஒட்டுநிலை, உட்பிணைப்பு நிலை
2. தனிநிலை என்பது தனித்தே நிற்கும் சொற்கள். உதாரணம் : வா, போ, நட, உண், படி

3. ஒட்டுநிலை என்பது தனிநிலை சொற்களோடு வேறு வேறு உறுப்புக்கள் சேர்ந்து சொற்களாவது. உதாரணம் : அறி = அறிந்தான், அறிஞன்
4. உட்பிணைப்பு நிலை என்பது, ஒரு சொல்லோடு இன்னொரு சொல் சேர்ந்து பகுதி, விகுதி என்று பிரிக்க முடியாது பிணைந்து பிறிதொரு சொல்லாக மாறுவது. உதாரணம் : கோவன்-புத்தூர் = கோவைதி ன மணி
5. உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்களை உயர்திணை என்பர்.
6. உயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்களையும் அக்றிணை எனக் கூறுவர்.
7. இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கலாம்.
8. பால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டு.
9. பால் ஐந்து வகைப்படும், அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
10. உயர்திணைக்கு உரிய பால்கள் : ஆண்பால், பெண்பால், பலர்பால்
11. அக்றிணைக்கு உரிய பால்கள் : ஒன்றன்பால், பலவின்பால்
12. தமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
13. தமிழில் முதலெழுத்து என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகைப்படும்.
14. ஒன்றினை சுட்டிக் காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர்.
15.சொற்களின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வந்தால் அது அகச்சுட்டு.
16. சொற்களுக்கு வெளியே சுட்டெழுத்து நிற்குமாயின் அது புறச்சுட்டு.
17. வினாப் பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.
18. சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.
19. சொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.
20. வல்லினம் - க, ச,ட, த, ப, ற
21. மெல்லினம் - ங, ஞ, ண, ந, ம, ன
22. இடையினம் - ய, ர, ல, வ, ழ, ள
23. மொழி முதல் எழுத்துக்கள் - க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங
24. மொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் - ட, ண, ர, ல, ழ, ள, ற, ன
25. மொழி இறுதி எழுத்துக்கள் - ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
26. இறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு. அவை - க், ங், ச், ட், த், ப், ற்
27. ஒரு சொல் உயிரெழுத்தில் துவங்கி, உயிரெழுத்தில் முடியும்.
28. மெய்யெழுத்தில் தொடங்காது, ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.
29. உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும், ஆனால் உயிர்மெய்யில் முடியாது.
30. மெய்யெழுத்தில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும் எழுத்துக்களாகும்.
31. போல இருத்தல் என்பதே போலி. இது முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படும்.
32. சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது முதற்போலி.
33. சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது இடைப்போலி.
34. சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.
35. தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்
36. ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)
37.  எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.
38.  குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
39. நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
40. மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் - அரை மாத்திரை அளவு
41. மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
42. குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
43. ஆய்த எழுத்துகளுக்கு - கால் மாத்திரை அளவு
44. ஐகார எழுத்துக்கு - 1 மாத்திரை அளவு
45. எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.
46. அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.
47. அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.
48. அளபெடை இரு வகைப்படும். அவை - உயிர் அளபெடை, ஒற்றளபெடை
49. உயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
50. செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் அழைக்கப்படும்.

Tuesday, October 30, 2012

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு ஒரு வாரம் தள்ளி வைப்பு

சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி
வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இதனால், 28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை. இதற்கிடையே, சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் பாஸ் செய்தவர்களுக்கு பணி நியமனம்

ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில்,
பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், நாளை (அக்., 31) ஆஜராக வேண்டும். வேலை வாய்ப்பு பதிவு அட்டை சான்றொப்பமிட்ட இரு நகல்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால்டிக்கெட் நகல், அழைப்பு கடித நகல் ஆகியவற்றுடன், வருகை தர வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுள்ளது.

Friday, October 12, 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு - புவியியல்

ஆசிரியர் தகுதித்தேர்வு - புவியியல்


  1. புவியின் சுற்றளவு 40,067 கி.மீ
  2. சூரியன் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 8.3 நிமிடங்கள்
  3. புவிக்கும் பிராக்சிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் 4.3 ஒளியாண்டு
  4. சூரியன் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ்
  5. புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை 5000 டிகிரி செல்சியஸ்
  6. சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை 15,000,000 டிகிரி செல்சியஸ்
  7. பனிப்பந்து என்றழைக்கப்படுவது புளூட்டோ
  8. ஆகாய கங்கை எனப்படுவது பால்வெளி அண்டம்
  9. சனிக்கோளின் துணைக்கோள்கள் எண்ணிக்கை 60
  10. சந்திரன் பூமிய சுற்றும் சராசரிவேகம் 9,84,401 கி.மீ
  11. சூரியக்குடும்பத்தில் அதிக அளவு வெப்பமுடைய கோள் வெள்ளி
  12. இந்தியாவில் சூரிய உதயத்தினை முதலில் பார்க்கும் மக்கள் அருணாச்சல பிரதேசம்
  13. இந்தியாவில் உள்ள மொத்த தீர்க்க கோடுகள் 29
  14. புவியின் வடிவம் ஜியாட்
  15. இந்தியாவில் சூரியன் மறைவதினை கடைசியாக பார்க்கும் மக்கள் குஜராத்
  16. குள்ளக்கோள்கள் புளூட்டோ, செரஸ்,ஏரிஸ், மேக்மேக்
  17. லீப் வருடத்தினை உருவாக்கியவர் போப் கிரிகாரி
  18. பருவகாலம் மாற்றம் ஏற்படக்காரணம் பூமியின் அச்சு 23 1/2 டிகிரி சாய்வாக அமைந்திருத்தல்
  19. லார்ஜ் ஹெட்ரான் கொலாய்டர் என்பது பெருவெடிப்பு கொள்கை பரிசோதனை கருவி
  20. சிமா என்பது சிலிக்கா மற்றும் மக்னீசியம்
  21. நைஃப் என்பது கருவம்(நிக்கல் மற்றும் இரும்பு)
  22. ரிக்டர் அளவு கோலின் அளவு 0 முதல் 9
  23. உறங்கும் எரிமலைகள் என்பது தணிந்த எரிமலைகள்
  24. துருப்பிடித்தல் என்பது ஆக்ஸிகரணம்
  25. பெந்தலாசா(கிரேக்க சொல்) என்பது எல்லா நீரும்
  26. எல்நினோ(ஸ்பானிய மொழி) என்பதன் பொருள் குழந்தைஏசு.கிரிஸ்துமஸ் காலத்தில் தோன்றும். இதனால் வறட்சி, பஞ்சம் ஏற்படும்.
  27. காயல் ஏற்படுவது கடல் அரிப்பினால்
  28. தாழ் மேகங்கள் எனப்படுவது படை மேகங்கள்
  29. உயர்மேகங்கள் என்பது கீற்றுமேகங்கள் 
  30. செங்குத்தான மேகங்கள் என்பது கார்படை மேகங்கள்
  31. பாரோமீட்டர் என அளவிடுவது வளிமண்டலத்தின் அழுத்தம்
  32. அனிமோமீட்ட அளவிடுவது காற்றின் வேகம் மற்றும் திசை
  33. மான்சூன்(அரேபிய சொல்) மவுசிம் என்றும் அழைக்கப்படும். இதன் பொருள் பருவகாலம்
  34. உயிரி ஆற்றல் பெறப்படுவது சாண எரிவாயு, கரும்பு, ஆமணக்கு
  35. வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுவது நான்காம் நிலைத்தொழில்கள்
  36. நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் இரண்டாம் நிலைத்தொழில்கள்
  37. கனிமங்கள் வெட்டி எடுத்தல் என்பது முதல்நிலைத்தொழில்
  38. சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் முதல் நிலைத்தொழில்கள்
  39. சிறந்த மீன்பிடித்தளம் கண்டத்திட்டு
  40. பெட்ரோலிய ஆழ்கிணறுகள் காணப்படுவது கண்டத்திட்டு
  41. நான்காம் நிலைத்தொழில் அதிகம் காணப்படும் இடம் நகரம்
  42. ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பது புஷ்மென்
  43. டோன்லேசாப் என்பது உலகின் மிகப்பெரிய மீன்பிடித்தளம்
  44. இரும்புத்தாதுவின் வகை சிட்ரைட்
  45. தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் ஐந்தாம் நிலைத்தொழில்கள்
  46. அலுமினியத்தாதுவின் வகை பாக்சைட்
  47. அடிப்படையான ஆதார வளம் நிலம்
  48. தற்சுழற்சி காலம் அதிகம் உள்ள கோள் வெள்ளி
  49. கிரீன்விச் தீர்க்ககோடு 0 டிகிரி தீர்க்ககோடு
  50. புவி சூரியனை சுற்றி வருவதால் ஏற்படுவது பருவ காலம்

Read more: http://alaiyallasunami.blogspot.com/2012/09/blog-post_28.html#ixzz293TAtaQH

Tuesday, September 11, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு - ஹால் டிக்கெட் வீடு தேடி வரும்!

1ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தகுதி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் கல்வி உரிமம் சட்டத்தின்
அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வை ஜுலை மாதம் 12-ம் தேதி நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் பணியில் நியமிக்க தகுதி படைத்தவராக கருதப்படுவர். அதனால் இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 6லட்சத்து 77 ஆயிரம் பேர் எழுதினார்கள். தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க போதிய காலஅவகாசம் கொடுக்கப்படவில்லை. இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியானது. இந்த தேர்வு முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தேர்வு எழுதியவர்களில் 2448 பேர் மட்டுமே வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைவரும் மிக குறைந்த மதிப்பெண்னை எடுத்து இருந்தனர்.

தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் பெறவேண்டும். ஆனால் தோல்வி அடைந்த பெரும்பாலானவர்கள் 20,30,40,50 மதிப்பெண்களை பெற்றனர். தேர்ச்சி விகிதம் ஒரு சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தது.

மேலும் 25 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்வில் 2448 பேர் மட்டும் தேர்ச்சி பெற்று இருந்ததால் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு 3 மணிநேரம் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. தேர்வு கட்டணம் செலுத்த தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் மறுதேர்வை எழுதலாம்.விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுதாதவர்கள் மறுதேர்வை எழுத இயலாது. மறுதேர்விற்கான ஏற்பாடுகளை தேர்வு வாரியம் விரிவாக செய்து வருகிறது.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம் செய்யப்படுகிறது. அவரவர் வீட்டிற்கு ஹால் டிக்கெட் தபால் மூலம் அனுப்பப்படுகிறது. ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Friday, April 27, 2012

பொருத்துக


*  வாரி - கடல்
*  கலிங்கம் - ஆடை
*  வயமா - குதிரை
*  புலம் - அறிவு
*  ஐயை - தாய்
*  செறிவு - அடக்கம்
*  இகல் - பகை
*  நகம் - மலை
*  வெச்சி - நிரை கவர்தல்
*  கரந்தை - நிரை மீட்டல்
*  நொச்சி - எயில் காத்தல்
*  வாகை - போரில் வெற்றி
*  வாள் - உயர்ந்த
*  பராவி - வணங்கி
*  கழனி -  வயல்
*  தொன்மை -   பழமை
*  பரி - குதிரை
*  அரி - சிங்கம்
*  மறி - ஆடு
*  கரி - யானை
*  பாரி -கபிலர்
*  அதியமான் - ஒளவையார்
*  கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
*  குமணன் -பெருஞ்சித்தனார்
*  சுரத்தல் - பெய்தல்
*  உள்ளம் - ஊக்கம்
*  வேலை - கடல்
*  நல்குரவு - வறுமை
*  முப்பால் - திருக்குறள்
*  தொல்காப்பியம் - தொல்காப்பியர்
*  மகாபாரதம் -  வியாசர்
*  தமிழ் முதற் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  யாப்பருங்கலம் - புத்தமித்திரர்
*  வீரசோழியம் -  அமிர்தசாகரர்
*  நேமிநாதம் -  குணவீர பண்டிதர்
*  நன்னூல்  - பவணந்தி முனிவர்
*  உழத்திப்பாட்டு - முக்கூடற்பள்ளு
*  முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  ஈரடி வெண்பா  -  திருக்குறள்
*  தென்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
*  திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
*  இன்தமிழ் ஏசுநாதர் - திருஞானசம்பந்தர்
*  கவிக்குயில் - சரோஜினிநாயுடு
*  காதல் இலக்கியம் - சீவக சிந்தாமணி
*  புதுவைக்குயில் - பாரதிதாசன்
*  யாருக்கும் வெட்கமில்லை - சோ.ராமசாமி
*  நம்மாழ்வார் - திருவாய்மொழி
*  சமணமுனிவர் - திருப்பாமாலை
*  கண்ணதாசன் - இயேசுகாவியம்
*  உமறுப்புலவர் - சீறாப்புரணம்
*  பாணாறு - பெரும்பாணாற்றுப் படை
*  புறம்பு நானுறு - புறநானூறு
*  திராவிடச் சிசு - திருஞான சம்பந்தர்
*  வியாக்கியான சக்கரவர்த்தி - பெரிய வாச்சான் பிள்ளை
*  வீரசோழியம் பாடியவர் - புத்தமித்திரர்
*  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள்
*  மருள் நீக்கியார் - அப்பர்
*  கிறித்துவக்கம்பன் - கிருஷ்ணப்பிள்ளை
*  முடியரசன் - பூங்கொடி
*  சிற்பி - நிலவுப்பூ
*  நா.காமராசன் - சூரியகாந்தி
*  பாரதிதாசன் - குறிஞ்சித் திட்டு
*  பாஞ்சாலி சபதம் - பாரதியார்*  பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
*  அர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்
*  கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து
*  திருவாசகம் - மாணிக்கவாசகர்
*  திருப்பாவை - ஆண்டாள்
*  பெண்ணின் பெருமை - திரு.வி.க.
*  தேவாரம் - திருஞானசம்பந்தர்
*  முக்குடற்பள்ளு -  ஆசிரியர் பெயர் தெரியவில்லை
*  பழமொழி - முன்றுறையரையனார்
*  இருண்ட வீடு - பாரதிதாசன்
*  ஏலாதி - கணிமேதாவியார்.

உவமையால் விளக்கப்படும் பொருள்


*  தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
*  இலைமறை காய் போல் - மறைபொருள்
*  மழைமுகம் காணாப் பயிர் போல -  வாட்டம்
*  விழலுக்கு இறைத்த நீர் போல  - பயனற்றது
*  சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல   -  மிக்க மகிழ்வு
*  உடுக்கை இழந்தவன் கை போல  - நட்புக்கு உதவுபவன்
*  மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல  - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
*  இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
*  குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
*  வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
*  வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
*  புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது  - சான்றாண்மை
*  சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
*  அனலில் விழுந்த புழுப்போல    -    தவிர்ப்பு
*  கண்ணைக் காக்கும் இமை போல  -  பாதுகாப்பு
*  நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை  -  நிலையாமை
*  உமி குற்றிக் கைவருந்தல் போல  -     பயனற்ற செயல்
*  பல துளி பெருவெள்ளம் -  சேமிப்பு
*  நத்தைக்குள் முத்துப் போல -  மேன்மை
*  ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு
*  பூவோடு சேர்ந்த நார் போல -  உயர்வு
*  நாண் அறுந்த வில் போல -  பயனின்மை
*  மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி
*  தாயைக் கம்ட சேயைப் போல   -   மகிழ்ச்சி
*  சிறகு இழந்த பறவை போல  -  கொடுமை
*  மழை காணாப் பயிர் போல  - வறட்சி
*  நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்
*  இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி
*  திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -  பெரியபுராணம்
*  இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
*  வள்ளலார் என்று போற்றப்படுபவர் - இராமலிங்க அடிகளார்
*  விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர் - கம்பர்

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 4





*  சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
*  அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
*  சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
*  கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
*  மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
*  மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை
*  மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்

*  கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
*  மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
*  திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
*  தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
*  தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
*  திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
*  குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
*  குமரகுருபரர் வாழ்ந்த  காலம் - கி.பி.16
*  நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
*  மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
*  வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
*  வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
*  தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்
*  ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
*  திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
*  அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
*  திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
*  முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்
*  ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
*  திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
*  கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
*  இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
*  வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
*  வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
*  வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
*  சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
*  நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
*  வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி -  ஒரு நாட்டியம் நடப்பது போல
*  காராளர் என்பவர் - உழவர்
*  ஆழி என்பதன் பொருள் -  மோதிரம்
*  வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
*  கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
*  தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
*  யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்
*  விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு
*  விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது
*  பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி
*  மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு
*  திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி
*  பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்
*  மதுரை என்பது - இடப் பெயர்
*  மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது -  தெற்குகோபுரம்
*  பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது -  முத்து
*  மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் -  செல்லத்தம்மன் கோயில்
*  நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை
*  மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்
*  மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர்
*  பரஞ்ஜோதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது - தருமிக்கு
*  மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது - மறைவழி
*  மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் - பேராசிரியர் சுந்தரனார்
*  மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எழுதப்பட்ட ஆண்டு - 1891
*  சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு - கி.பி.19
*  முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30
*  இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி - தமிழ்
*  நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் -   பம்மல் சம்பந்தனார்
*  மறை வழி என்ற நூலை எழுதியவர் - லார்டு லிட்டன்
*  தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி
*  தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் - கந்தசாமி
*  உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு - கி.பி.15
*  உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது -  கலீலியோ
*  "திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது - சந்திர கிரகணம்
*  உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் - வாய்மை
*  ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது - சார்பெழுத்து
*  திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 430
*  திரு.வி.க . பிறந்த ஊர் - தண்டலம்
*  உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் - பள்ளு
*  நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் - கி.பி.12
*  அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு - கி.பி.18
*  தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன  -   புராணக்கதைகள்
*  குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது - நாயக்க மன்னர்கள் காலத்தில்
*  ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் - ராசராசேச்சுவரம்
*  மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் -  மகோந்திரவர்ம பல்லவன்
*  மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் -  கி.பி. 7
*  நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் - சிலப்பதிகாரம்
*  தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு - நாட்டியம் என்று பெயர்
*  கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது -  அடியார்க்கு நல்லார்
*  நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது - நாடகம்
*  மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் - திரு.வி.க
*  திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - வெஸ்லி பள்ளி
*  அக இருளை போக்கும் விளக்கு - பொய்யா விளக்கு
*  நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர்  -  72
*  சார்பெழுத்துக்கள் எத்தனை வகை - 10
*  அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது  -   முதுமொழிக்காஞ்சி
*  முதுமொழிக் காஞ்சியில் உள்ள  பாடல்களின் எண்ணிக்கை - 100
*  மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
*  நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் -  மோசிக்கீரனார்
*  முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 10
*  முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார்
*  கற்றலை விட சிறந்தது - ஒழுக்கமுடைமை
*   மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு - 1815
*  வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு
*  "நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் - உள்
*  "பால் பற்றி செல்லா விடுதலும்"  என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் - ஒருபக்க சார்பு பற்றி
*  காளமேகப் புலவர் பிறந்த ஊர் - நந்திக்கிராமம்
*  சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் - சீனிவாச ராமானுஜம்
*  ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் - துறைமுகம்
*  ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு - இங்கிலாந்து
*  ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் -   0
*  ராமானுஜர் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்
*  பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு அமைக்கப்பட்டுள்ள இடம்  -   சென்னை
*  ராமானுஜர் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு - 1919
*  கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஆண்டு - 1887
*  கணித மேதை ஜாகோபி ஜெர்மனியில் வாழ்ந்த நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு
*  ராமானுஜர் ஆய்வாலராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் - லிட்டில்வுட்
*  ராமானுஜத்தின் வழிமுறைகளை ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் வெளியிட்டவர் -  ஹார்டி
*  ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் -   ஈ.டி.பெல்

*  மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை - அரை மாத்திரை
*  ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு - மாத்திரை என்னும் பெயர்
*  திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்
*  தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்
*  ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது - முன்னிலை இடம்
*  இடம் எத்தனை வகைப்படும் - 3 வகை
*  மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு -  இடம் என்று பெயர்
*  ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் -  பன்மை
*  பல பொருள்களை குறிக்கும் சொல் - பலவின்பால்
*  பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது - பலர்பால்
*  ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை - உயர்திணைக்கு உரியவை
*  எண் எத்தனை வகைப்படும் - இரண்டு
*  ஒரே பொருளை குறிக்கும் சொல் - ஒருமை
*  மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு -  உயர்திணை
*  அளபெடை எத்தனை வகைப்படும் - 2 வகை
*  செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு  உயிரளபெடை என்று பெயர்
*  திணை என்பது - ஒழுக்கம்
*  சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ
*  சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து - ஏ
*  சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் - ஆ, ஓ, ஏ
*  சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் -  எ, யா, ஏ
*  வினா எழுத்துக்கள் - 5
*  சுட்டெழுத்துக்கள் - 3
*  பால் - 5
*  பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.
*  ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது - சுட்டு
*  பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும்  5 பால்களாக பிரிக்கலாம்
*  திணை - 2 வகை
*  நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்
 *  ஒரு பெண்ணைப் பார்த்து "மான் கொல்? மயில் கொல்?" என்பது - செய்யுள் வழக்கு
*  மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் -    அஃறிணை



அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்


*    தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க.
*   தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்
*   வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்
*   நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
*   ரசிகமணி  -  டி.கே.சி
*   தத்துவ போதகர்   -   இராபார்ட் - டி - நொபிலி
*   தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா
*   தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி -  சுஜாதா
*   தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி
*   மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
*   இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி
*   வேதரத்தினம் பிள்ளை -  சர்தார்
*   கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை
*   தசாவதானி -  செய்குத் தம்பியார்
*   செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி
*   மே தினம் கண்டவர் -  சிங்கார வேலனார்
*   பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி
*   தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர்  -  அறிஞர் அண்ணா
*   தமிழ்நாட்டின் மாப்பஸான் -  புதுமைப்பித்தன்
*   தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்
*   உவமைக் கவிஞர் -   சுரதா
*   கவிக்கோ -    அப்துல் ரகுமான்
*   உரையாசிரியர் -    இளம் பூரணார்
*   கவிமணி -     தேசிய விநாயகம்பிள்ளை
*   குழந்தைக் கவிஞர் -    அழ.வள்ளிப்பா
*   தொண்டர் சீர் பரவுவார் -    சேக்கிழார்
*   குறிஞ்சி மோமான் -    கபிலர்
*   கவிச்சக்கரவர்த்தி -    கம்பன்
*   ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் -    திருநாவுக்கரசு
*   ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு  -    ஞான சம்பந்தர்
*   முத்தமிழ் காவலர்  - கி.ஆ.பெ.விஸ்வநாதம்
*   திருக்குறளார்  -   வி.முனிசாமி
*   இராமலிங்கனார் -     ஆட்சித் தமிழ் காவலர்
*   20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் -     பண்டித அசலாம்பிகை
*   பேயார்   -    காரைக்கால் அம்மையார்
*   பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் -   பாரதியார்
*   சிந்துக்குத் தந்தை -   அண்ணாமலை செட்டியார்.
*   மூதறிஞர் -  இராஜாஜி
*   சொல்லின் செல்வர் -  இரா. பி. சேதுப்பிள்ளை
*   காந்தியக் கவிஞர் -  நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
*   கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
*   மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
*   சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
*   சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்
*   புதுக்கவிதை தந்தை - பாரதியார்
*   சோமசுந்தர பாரதியார் - நாவலர்
*   ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்
*   தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
*   தமிழ் வரலாற்று நாவலின் தந்தை -  ககல்கி
*   தமிழ் நாடகத் தந்தை -  பம்மல் சம்பந்த முதலியார்
*   தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
*   தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்





*   தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்
*   சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
*   சீவகசிந்தாமணி - மணநூல்
*   கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்
*   அகநானூறு - நெடுந்தொகை
*   பழமொழி - முதுமொழி
*   பெரிய புராணம் -  திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
*   இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்
*   பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு
*   கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
*   புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
*   பெரும்பாணாற்றுப்படை - பாணாறு
*   மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை
*   முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
*   குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு
*   வெற்றிவேற்கை - நறுத்தொகை
*   மூதுரை - வாக்குண்டாம்
*   பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
*   சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்
*  மணிமேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
*   நீலகேசி - நீலகேசித்தெருட்டு

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 3





*  தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
*  பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க
*  'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
*  நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
*  குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
*  இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
*  தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக

*  மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
*  ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
*  இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்
 சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
*  சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
*  கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்
*  "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
*  இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
*  இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
*  பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
*  இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
*  இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
*  எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
*  கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
*  கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
*  வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
*  "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
*  ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
*  "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
*  திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
*  திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
*  திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்
*  "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
*  நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை
*  ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
 *  வசை என்ற சொல்லின் பொருள் - பழி
*  வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்
*  விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா?  - ஒளி
*  குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
*  குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
*  குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
*  புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்
*  புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
*  சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
*  சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
*  எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
*  குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
*  குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
*  குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
*  குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
*  குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
*  திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை
*  மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
*  குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி
*  குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்
*  குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
*  குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்
*  நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்
*  நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.
*   நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை
*   காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
*   அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
*   அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
*   அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்
*   அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
*   காவடிச் சிந்துவின் ஆசிரியர் -  அண்ணாமலை ரெட்டியார்
*   மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்
*   நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
*   அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
*   ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
*   நவரசம் என்பவை - நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.
*   ஐந்திலக்கணம் என்பவை - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
*   எண் வகை மெய்ப்பாடுகள் எவை -  நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
*   பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து - மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம்,  உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
*   கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18
*   சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை
*   ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
*  மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.
*   நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.
* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
*  புறந்திணை  - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
*  கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்
*  வைக்கம் வீரர் -பெரியார்
*  யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.
*  ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்
*  புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு
*  நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்
*  கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி
*  தணலிலிட்ட மெழுகு போல  - கரைதல்
*  உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சமூக அறிவியல் வினாக்கள் பகுதி 5





1. ஒயில் என்ற சொல்லின் பொருள் - நடனம்


2. திருவண்ணாமலை மாவட்டம் புரிசை கிராமம் புகழ் பெறக் காரணம் - கூத்துக் கலைஞர்கள்

3. கிழக்குக் கடற்கரைக் கம்பெனி தமிழ்நாட்டில்- ..... கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. - சோழமண்டலம்

4. நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம் - தொட்டப்பெட்டா

5. தமிழ்நாட்டின் கடற்கரை நீள ஏறக்குறைய - 1000 கிமீ.


6. தமிழ்நாட்டின் பெரும்பானமை  மொழி - தமிழ்

7. சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர், சூட்டப்ட்ட நாள் - 14.01.1968

8.யாருடைய பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது - டாக்டர் ராதாகிருஷ்ணன்

9. யாருடைய பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது - ஜவகர்லால் நேரு

10. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு - 1956

11. புவி தினத்தை முதன் முதலில் கொண்டாடியவர் - கேலார்ட் நெல்சன்.

12. மகாத்மாக காந்தியடிகள் பிறந்த தினம் - அக்டோபர் 2, 1869

13. தைத்திங்கள் முதல் நாள் - பொங்கல்.

14. திருவோணம் கொண்டாடப்படும் மாநிலம் - கேரளா

15. கதக்களி நடனம் ஆடப்படும் மாநிலம் - கேரளா

16. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் - ஏப்ரல் 1, 2010

17.ஆகாய விமானம் கண்டுபிடித்தவர் - ரைட் சகோதரர்கள்

18. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிற்சாலை அல்லது கடைகளில் பணியமர்த்தக் கூடாது.

19. ஆண்டிஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - தென்அமெரிக்கா

20. ஆல்ப்ஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - ஐரோப்பா

21. ராக்கி மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம்  - வட அமெரிக்கா

22. கிளிமஞ்சாரோ அமைந்துள்ள கண்டம் - ஆப்ரிக்கா

23. இந்தியாவில் அமைந்துள்ள பீடபூமி - திபெத் பீடபூமி

24. கிழக்கு ஆசியாவில் காணப்படும் பீடபூமி - திபெத் பீடபூமி

25. வட அமெரிக்காவில் உள்ள பீடபூமி - கொலராடோ பீடபூமி

26. சிந்து கங்கை சமவெளி காணப்படும் இடம் - இந்தியா

27. லியானாஸ் சமவெளி காணப்படும் இடம் - தென்அமெரிக்கா

28. லிம்பார்டி சமவெளி காணப்படும் இடம் - ஐரோப்பா

29. கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்புகள் - சமவெளி

30. மலைகளை விட உயரம் குறைவாகவும், பூமி மட்டத்திற்கு மேல் உயர்ந்து தட்டையாகவும் உள்ள நிலப்பகுதிகள் - பீடபூமிகள்

31. 0 டிகிரி அட்சக் கோடு - நிலநடு கோடு

32. 23 அரை டிகிரி வடக்கு அட்ச ரேகை - கடக ரேகை

33. 66 அரை வடக்கு அட்ச ரேகை - ஆர்டிக் வட்டம்

34. 66 அரை டிகிரி தெற்கு அட்ச ரேகை - அண்டார்டிக் வட்டம்

35. 23 அரை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை

36. பூமியின் மீது வரையப்படும் அட்ச ரேகைகளின் எண்ணிக்கை 180

37. வரைபடத்தில் இடங்களை எளிதில் காண பயன்படுவது - அட்சரேகையும், தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடம்

38. கிரின்வீச் மைய தீர்க்கக் கோடுகள் - 0 டிகிரி

39. மொத்த வரையப்பட்ட தீர்க்க ரேகைகளின் எண்ணிக்கை - 360

40. மெரிடியன் என்று அழைக்கப்படுவது - தீர்க்க ரேகைகள்

41. புவிக் கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்ச ரேகைகள்.

42. பூமியின் சிறிய மாதிரி - புவிக்கோளம்.

43. தீபக்கற்பத்திற்கு எடுத்துக் காட்டு - இந்தியா

44. கடலின் அடிப்பகுதியில் - மலைகள், மலைத் தொடர்கள், குன்றுகள் உள்ளன.

45. தீபகற்பம் என்படுது  - மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.

46. பசுபிக் பெருங்கடலின் பரப்பானது புவியின் பரப்பில்  - மூன்றில் ஒரு பங்கு

47. பெருங்கடல்களின் மிகப் பெரியது - பசுபிக் பெருங்கடல்

48. கண்டங்களை சுற்றி அமைந்து பெருங்கடல்களின் எண்ணிக்கை- 5

49. ஆழமான மிகப்பரந்த நீர்பரப்புகள் - பெருங்கடல்கள்

50. கிராண்ட் கேன்யான் அமைவிடம் - வடஅமரிக்கா