Tuesday, November 13, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 205


1.தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் எது ?
2.தமிழ்நாட்டில் எந்த வகை மரம் அதிக அளவில் காகிதம் செய்யப் பயன்படுகிறது ?
3.நாரிலிருந்து காகிதம் தயாரிப்பது எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது ?
4.பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?
5.’காந்தி’ திரைப்படத்தை தயாரித்தவர் யார் ?
6.1951-1952-ல் ஆசிய விளையாட்டுப்போட்டி எங்கு நடைபெற்றது?
7.’கிரிக்கெட் மை ஸ்டைல் ‘ என்ற நூலின் ஆசிரியர் யார்?
8.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது ?
9.’அர்ஜூனா ‘ பதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு வழங்கப்பப்படுகிறது ?
10.இந்தியாவில் தேக்கு மரம் எங்கு அதிகமாக கிடைக்கிறது ?
பதில்கள்:
1.கி.பி. 16 ஆம் நூற்றாண்டு, 2.யூகலிப்டஸ்,3.எகிப்து,
4.மும்பை,5.ரிச்சர்டு அட்டன்பரோ, 6.டெல்லி,
7.கபில்தேவ்,8.கயத்தாறு, 9.விளையாட்டுத்துறை,10.கேரளா

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 204


1.இந்த ஆண்டின் பெண்மனி என்ற சங்கம் எப்போது தொடங்கப்பட்டது ?
2.நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார் ?
3.ஆசியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தீபகற்பம் எது ?
4.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது ?
5.தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது ?
6.வருமான வரி செலுத்தாத நாடு எது ?
7.ஜெருசலம் எந்த நாட்டின் தலைநகரமாகும் ?
8.பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ?
9.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன ?
10.ரேடியத்தை கண்டிபிடித்த மேரிகியூரியின் சொந்தநாடு எது?
பதில்கள்:
1.1945 ஆம் ஆண்டு, 2.கிரேக்கர்கள்,3.இந்தியா, 4.அமெரிக்கா,5.ஸ்வீடன், 6.குவைத், 7.இஸ்ரேல்,8.ரஷ்யா, 9.மாலைப் பாடல்கள்,10.போலந்து

Monday, November 5, 2012

குரூப் 2 தேர்வு ; 45 நாளில் தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ்


டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மறுதேர்வு நடந்தது. இது குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டி.என்.பி.எஸ்.சி., தலைவர் ஆர்.நட்ராஜ், குரூப் 2 தேர்வு முடிவுகள் 45 நாளில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விடைகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். விரைவில் கணினி வழி தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Sunday, November 4, 2012

குரூப்-2 தேர்வுக்கான வெற்றி ரகசியங்கள்...


   நாளை (நவம்பர் 4) குரூப்-2 தேர்வு நடக்கிறது. அன்று மதியம், இந்து அறநிலையத்துறையின் கீழ்வரும் திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுக்கான குரூப்-7 பி தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய ஆலோசனைகள்...

சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வினாத்தாள் மாற்றி அமைக்கப்பட்டு, சிந்தனைத் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மனப்பாடம் செய்து எழுதியவர்கள், இனி சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்.
ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி எப்போது நடந்தது என்ற தகவலை மட்டும் தெரிந்து கொள்ளாமல், அது நடந்ததற்கான காரணங்களை அறிய வேண்டும். முந்தைய வினா தாள்களில் பொதுத் தமிழ் எளிமையாக இருந்தது. பெரும்பாலான மாணவர்கள், 90 சதவீத மதிப்பெண்களை பெறுவது சாத்தியமாக இருந்தது. மாற்றியமைக்கப்பட்ட வினாத்தாளில் 80 சதவீத மதிப்பெண்கள் பெறுவதே சவாலான விஷயம். தமிழில் அதிகபட்ச மதிப்பெண்களை பெறுபவர்களால் தான், தேர்வில் சாதிக்க முடியும்.
சொற்களை ஒழுங்குபடுத்தி, சரியான சொற்றொடர் அமைக்கும் பகுதியில் புகழ்பெற்ற செய்யுள் வரிகளே வினாக்களாக தரப்படுகின்றன. "பொருள் தருக' பகுதி வினாக்கள், பொருத்துக வடிவில் கேட்கப்படுகின்றன. ஆழமான பொருள் கொண்ட இவ்வகை வினாக்களுக்கு விடையளிக்க, பிளஸ் 1, பிளஸ் 2 தமிழ்ப் புத்தகத்தில் செய்யுள் பகுதிளை படிக்க வேண்டும்.
பகுபத உறுப்பு இலக்கணம், சீர்பிரித்தல், அசைபிரித்தல், எதுகை, மோனை, அளபெடைகள், யாப்பு, ஆகு பெயர்கள் ஆகியவை வினாத்தாளில் புதிய அம்சங்கள். இவற்றுக்கு சரியாக விடையெழுத நல்ல பயிற்சியும், பரிச்சயமும் அவசியம். இவை ஒன்பதாம், பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்திலிருந்து கேட்கப்படுகின்றன.விடைக்கேற்ற வினாவை தேர்வு செய்யும் பகுதியில், செய்யுள் வடிவத்திலேயே வினாக்கள் இடம் பெறும். 
பொதுவாக திருக்குறள், செய்யுள், பழமொழிகளிலிருந்தே கேள்விகள் தரப்படுகின்றன. இதற்கு விடையளிக்க, ஆறிலிருந்து பிளஸ் 2 வரை உள்ள திருக்குறள், செய்யுளை படித்தால் போதும்.இலக்கணக் குறிப்பு, வாக்கிய வகைகளை தேர்வு செய்தல் ஆகியவற்றுக்கு உதாரணம் கேட்பதை விட, அவற்றுக்கு வரையறைகள் கேட்கப்படுகின்றன. இந்த வினாக்கள் எளிமையாக தோன்றினாலும், நுட்பமான வேறுபாடுகள் கொண்டவை. கவனமாக பதிலளிக்க வேண்டும்.
நூல் மற்றும் நூலாசிரியர்கள் குறித்த வினாக்களில் நவீன எழுத்தாளர்கள் பற்றியும், நூல்கள் பற்றியும் விவரங்களை தொகுத்து வைத்துக் கொள்வது நல்லது. சாகித்ய அகாடமி விருது வென்றவர்கள், பரிசு பெற்ற நூல்கள், ஞான பீட பரிசு பெற்றவர்கள் ஆகியோரையும் அறிந்து கொள்ள வேண்டும்.
வரலாறு பாடத்துக்கு, 6,7,8ம் வகுப்பு பாடப் புத்தகங்களே போதுமானவை. இப்பாடங்களில் உள்ள தலைப்புகளை ஒட்டி, மேலும் சில தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டால் நல்ல மதிப்பெண் பெறலாம். புவியியல் பாடத்துக்கு 7,8ம் வகுப்பு பாடப் புத்தகங்களும், பொருளியலுக்கு 9,10, பிளஸ் 1 பாடப்புத்தகங்களும் போதுமானவை.
அறிவியல் பாடத்துக்கு, 6-10 வகுப்பு வரை உள்ள இயற்பியல், வேதியியல் பாடங்களும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உயிரியல் பாடங்களும் அவசியம். புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களையும், விளக்கப் படங்களையும் படிக்க வேண்டும்.
நடப்பு நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க, தினசரி செய்தித்தாள்கள் படித்து வருவது தான் ஒரே வழி. சமீபத்திய நிகழ்வுகள் அடங்கிய புத்தகங்கள் ஓரளவு பயன் தரும். எல்லாவற்றையும் விட, தேர்வு எழுதும் மூன்று மணி நேரமும் நேரத்தை சரியாக பயன்படுத்தி, விரைவாக அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பது அவசியம். தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள், வெற்றி உங்கள் வசம்.

Monday, October 22, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 187


*  தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் - ஆர்.என்.ஏ

*  எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் - எச்ஐவி

*  பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்

*  இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்

*  பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை

*  கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்

*  தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு --- வெலாமன்

* மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்

*  மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது -  தட்டைப்புழு

*  குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா

*  சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.

*  கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.

*  பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது

*  எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து -  அசிட்டோதையாமிடின் AZT

*  தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்

*  ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்

*  பறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்

* ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்

*  ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்

*  விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து

*  பின்னுக் கொடிக்கு எடுத்துக்காட்டு - அவரை

*  குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்

*  மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்

*  வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 176


*  ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்
*  விழுங்கும்முறை உணவூட்டம் கொண்டது - அமீபா

*  அனைத்து உண்ணிக்கு உதாரணம் - மனிதன்

*  ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு - சிங்கம்

*  தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு - யானை

*  ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம்

*  விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை

*  புரோட்டோ பிளாசத்திலுள்ள நீரின் சதவீத இயைபு - 90%

*  அடர்த்தி குறைவான பொருள் - வாயு

*  கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு

*  மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் -  மீன்தூண்டில்

* உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு - உயிரியல்

*  மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்

*  அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்

*  வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்

*  புவி நாட்டம் உடையது - வேர்

*  இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்

*  யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்

*  டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை

* ரேபிஸ் -  வைரசினால் உண்டாகிறது.

* முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா

* நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்

*  மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்

*  அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 188


*  சூழ்நிலை என்ற சொல்லை வரையறுத்தவர் - ரெய்ட்டர்
*  நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்

*  தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்

* தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்

*  இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்

*  ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்

* உழவனின் நண்பன் - மண்புழு

*  சிதைப்பவை - காளான்

*  உயிர்க்காரணி - பாக்டீரியா

*  கழிவு நீக்கி - கரப்பான் பூச்சி

*  மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு - கழுகு

*  வாலிஸ்நேரியா என்பது - நீரில் மூழ்கியது

*  முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்

*  மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் -  சார்லஸ் டார்வின்

*  பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - தூந்திரப் பிரதேசம்

*  வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்

* விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்

*  இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி

*  மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 177


* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் - டாக்டர் அம்பேத்கார்
* 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 - 2010

* இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி

* இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்

* வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram

* தூய்மையான நீரின் PH மதிப்பு -  7

* அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு

 * இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்

 * சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்

  * முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு

  * நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு

 * முண்டு வேர்கள் கொண்ட தாவரம்  -   சோளம், கரும்பு

 * கொத்து வேர்கள் கொண்ட தாவரம் -  டாலியா

  * பின்னுகொடி தாவரம் - அவரை

 * ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை

 * பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்

* டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்

* பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - எய்ட்ஸ்

* தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்

* பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.

* தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.

* பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் - ஃபுளோரிஜென்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 178


* இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக்
குரோமோசோம்

* டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்

* முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்

* நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்

* ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்

* படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்

* மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி

* அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்

* இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்

* பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)

* ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்

* 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று

* கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்

* மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை

* ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்

* மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்

* வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்

* ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி

* எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா

* முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி

* பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்

* முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு

* இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு

* பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் -  பாஸ்விடின், லிப்போ விட்டலின்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 179


* மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்
* கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்

* கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு -  பைலைடு

* கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்

* தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று

* களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்

* ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் - 133வது இடம்

* உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு - இந்தியா

* இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது - ஜூலை

* கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்

* ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்

* புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா

* தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் - லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்

* தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம் - ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)

* கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு

 * ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்

* இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்

* வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்

* பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்

* யூரியாவின் உருகு நிலை - 135o C

* இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்

* இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை -  நடுநிலையாக்கல்

* இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு

* புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 182


*  பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
*  இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

*  எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)

*  ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

*  வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4

*  உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

*  ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.

*  காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

*  அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

*  காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

*  குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0

*  சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்

*  ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்

* தாவர செல்லில் இல்லாத உறுப்பு - சென்ட்ரோசோம்

* தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.

* கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்

* தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.

* புளோயம் ஒரு கூட்டு திசு

* வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.

* தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் - கியுட்டிக்கிள்

* நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.

* பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.

* கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.

* சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 183


* மியுஸா பாரடிசியாகா என்பது வாழையின் தாவரவியல் பெயர்
* கரும்பைத் தாக்கும் பூச்சிகளின் முதன்மை யானது - கரும்பு கரையான் பூச்சி

* வாழையைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சி மருந்து - கார்போ பியுரன்

* மாலத்தீயான் என்பது - பூச்சிக்கொல்லி

* ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு - இலை

* தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் - வாண்டா

* கூட்டுயிர்த் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - லைக்கன்கள்

* கோடைக்காலத்தில் நீராவிப் போக்கைத் தடுக்க ிளைகளை உதிர்த்து விடும் தாவரம் - சவுக்கு

* இலைத் தொழில் தண்டு - சப்பாத்தி

* மார்சீலியா என்பது -நீர்த்தாவரம்

* தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது - செல்லுலோஸ்

* ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.

* வரித்தசை நார்களின் மேலுறை - சார்கோலெம்மா எனப்படும்.

* தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள் - உற்பத்தியாளர்கள் எனப்படும்.

* அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம் - சூரியன்

* உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை - தாவரங்கள்

* நரம்பு திசுவின் உடல் பகுதி - சைட்டான் எனப்படும்.

* கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் - நீலகிரி வன விலங்கு பாதுகாப்பகம்.

* நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.

* தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.

* மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி - வன்கட்டை எனப்படும்.

* மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது - மண்புழு உரம்

* இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள் - சின்னமால்டிஹைடு

* வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது - அனிராய்டு பாரமானி

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 184


* எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் - ஏலக்காய்
* சிஸிஜியம் அரோமேட்டிகம் என்ற தாவரத்தின் உலர்ந்த மலர் மொட்டு - கிராம்பு

* மனிதனின் விலங்கியல் பெயர் - ஹோமோசேப்பியன்ஸ்

* பித்தக் கற்களை உருவாக்குவது - கொலஸ்ட்ரால்

* மைட்ரல் வால்வு என அழைக்கப்படுவது - ஈரிதழ் வால்வு

* கடந்த கால நினைவுகளை நினைவுகூற இயலாத நிலை - அம்னீசியா

* உணவு உட்கொள்ளாத சம்யத்தில் உடலில் குளுக்கோசின் அளவு - 70 முதல் 110 மி.கிராம்/டெலிட்டர்

* ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்

* வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும் - தடை செல்கள்

* பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்

* நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.

* பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் - கிரிட்டினிசம்

* இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது - கார்பன் மோனாக்ஸைடு

* இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்

* கார்பஸ் லூட்டியம் சுரப்பது - ரிலாக்சின்

* பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் - விரால்

* செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்

* சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 -25 சதவீதம்

* மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி

* சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்

* சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்

* இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்

* இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்

* 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் - இன்சுலின்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 185


* மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்
* கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்

* காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை

* அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா

* கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை

* விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா

* தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ

* பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்

விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி

நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்

* இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்

* ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி

தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்

எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்

* ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்

* விலங்குகளின்உடலைச் சுற்றி லுறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு

* அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி

மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.

* நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடைய்ல் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்

* நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்

* சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 186


* நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.
* கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி

* மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்

* செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்

* உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்

செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்

* பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்

* புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்

* புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்

* மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்

* ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.

* பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்

தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி மெலானின்

மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.

கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி - கரப்பான் பூச்சி

பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு - நீலத் திமிங்கலம்

செவுள்களால் சுவாசிப்பது - மீன்

மனிதன் ஒரு அனைத்து உண்ணியாவான்

யானை ஒரு தாவர உண்ணி

எம்ஃபைசிமா என்பது - சுவாச நோய்

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 23

*  புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை


*  மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா

*  ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா

*  மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி

*  சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து

*  தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்

*  இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்

*  இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்

*  அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன

*  தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்

*  சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்

*  காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை

*  காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை

*  மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை

*  மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள்

*  மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள்

*  மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா

*  மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்

*  தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்

*  திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்

*  சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) - மணிமேகலை

*  சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்

*  வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்

*  தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்

*  "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்

*  "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 24

*  "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் -
பாரதியார்.

*  "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.

*  திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்

*  தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ

*  மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்

*  தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை

*  சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.

*  சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.

*  சங்கங்கள் தமிழ் வளர்த்தன.

*  களவியலுரை என்பது ஒர் உரைநூல்.

*  களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்

*  களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்

*  பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்

*  பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி

*  பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.

*  மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை

*  முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.

*  தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை

*  உலா நூல்களுள் மிகப் பழமையைனது -  திருக்கைலாய ஞான உலா

*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

*  கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்

*  ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

*  திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்

*  கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்

*  தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி

*  கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்

*  "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்

*  "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 25

*  "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்


*  திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்

*  பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்

*  கருடாம்சம்    - பெரியாழ்வார்

*  சுதர்சனம் - திருமழிசை

*  களங்கம் -  திருமங்கையாழ்வார்

*  காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்

*  நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து

*  அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்

*  காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி

*  அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்

*  சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்

*  பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு

*  குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்

*  பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.

*  திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்

*  சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் -  திருத்தக்கதேவர்

*  அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்

*  செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்

*  சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது

*  காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை

*  ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது

*  இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது

*  புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்

*  அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்

*  முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்

*  மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை

*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 189


1.பயணிகளை சுமந்து கொண்டு பறந்த முதல் விமானம் எது?
2.ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது?
3.புதுடில்லியை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் யார்?
4.ஒரு கடல் மைல் என்பது எவ்வளவு தூரம்?
5.இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளில் மிகச்சிறிய நாடு எது?
6.குச்சிப்பிடி நடனத்தின் தாயகம் எது?
7.இந்தியாவின் மிகப் பழமையான செய்தித்தாளின் பெயர் என்ன?
8.போட்ஸ்வானா நாட்டின் கரன்ஸியின் பெயர் என்ன?
9.உலகின் முதல் அருங்காட்சியகம் எது?
10.இன்றும் மரத்தினால் செய்த செருப்பை உபயோகிக்கும்  நாடு எது?

பதில்கள்:
1.டக்ளஸ் DC-3 2.டொமினிகன் குடியரசு 3.லட்டியன்ஸ் 4.1-925 கி.மீ 5.பூடான் 6.ஆந்திரா 7.மும்பை சமாச்சார் 8.புலா 9.ஆஸ்ரமாலியன் 10.செயிண்ட் நிக்கலஸ்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 190

1.வங்காளவிரிகுடாவில் கலக்காத நதி எது ?

2.குளிர்காலத்தில் அதிக மழைபெரும் மாநிலம் எது ?
3.தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் மாவட்டம் எது ?
4.ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது ?
5.ஜோக் நீர்வீழ்ச்சி எங்குள்ளது ?
6.உலகின் முதல் விண்வெளி வீரர் யார் ?
7.மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது ?
8.சில்கா ஏரி காணப்படும் இடம் எது ?
9.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது ?
10.எலிபெண்டா குகைகள் எங்குள்ளன ?
பதில்கள்:
1.நர்மதை, 2.தமிழ்நாடு,3.கோயம்புத்தூர்,4.பஞ்சாப்,
5.கர்நாடகம், 6.யூரி ககாரின், 7.உதகமண்டலம்,
8.மகாநதிச் சமவெளி,9.சென்னை,10.மும்பை