Tuesday, November 6, 2012
10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு
10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது - பள்ளிகல்வித்துறை - தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம்
Monday, November 5, 2012
அரசு ஊழியர்கள் வீடு கட்ட கடன் ரூ.25 லட்சமாக உயர்வு
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசியதாவது: நிதிநிலை அறிக்கையைத்
தாக்கல் செய்த பிறகு, அதில் அறிவிக்கப்பட திடங்களுக்கு கூடுதல் நிதி
ஒதுக்குவதும், புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தேவைப்படும் கூடுதல்
நிதியை வழங்குவதே முதல் துணை நிதி நிலை கோரிக்கையின் நோக்கமாகும். அதன்
அடிப்படையில் ரூ.5,617.14 கோடி கூடுதலாகத் தேவைப்படுகிறது என கோரப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு வீடுகட்ட முன்பணக் கடன் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் ஊழியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.2 லட்சத்தை ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை முன்பணம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடன் பெற மத்திய அரசு அனுமதித்துள்ள அளவு ரூ.20,716 கோடி என்றாலும், வரவு செலவு திட்டமதிப்பின்படி ரூ.18,387.47 கோடி கடன் பெற நாம் உத்தேசித்துள்ளோம். மின்சார பகிர்மான கழகத்திற்கு வழங்கப்படும் கூடுதல் நிதி உதவியையும் கணக்கில் கொண்டாலும் கூடுதலாக கடன் பெறாமல் அரசின் நிதித் தேவையை நிறைவு செய்யவே தமிழக அரசு முயன்று வருகிறது.
மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு கூடுதல் நிதியை கோரியுள்ளோம். இந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்ற ரூ.4,086 கோடியில், ரூ.1,000 கோடி முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது. நீலம் புயலுக்கு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்கள். மாநில பேரிடம் நிவாரண நிதி 2012,2013 நிதி ஆண்டிற்கு ரூ.323 கோடியே 61 லட்சம் ஏற்கெனவே அரசு ஒதுக்கி உள்ளது. இதிலிருந்து உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
Sunday, November 4, 2012
இளங்கலை, முதுகலை படிப்புகளில் அறிமுகமாகிறது செய்முறை, எழுத்து தேர்வு
இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முறையில், அடுத்த கல்வி
ஆண்டில், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. செய்முறைத்
தேர்வுக்கு, 40 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள் என,
பிரித்து வழங்கவும், மொழிப் பாடங்களில், அறிவை மேம்படுத்துவதற்கு, பல புதிய
திட்டங்களும் அமல்படுத்தப்பட உள்ளன.
தமிழக அரசு பல்கலைகளின், தேர்வுக்
கட்டுப்பாட்டு அலுவலர்கள் கூட்டம், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன்
தலைமையில், சென்னையில் நடந்தது. தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர்
சிந்தியா பாண்டியன் மற்றும் சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை
உள்ளிட்ட, பல்வேறு பல்கலைகளின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள்,
கூட்டத்தில் பங்கேற்றனர்.
இளங்கலை, முதுகலை தேர்வுகளில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, பல்வேறு
சீர்திருத்தங்களை கொண்டு வருவது குறித்து, கூட்டத்தில் விரிவாக
ஆராயப்பட்டது. பாட வாரியாக வழங்கப்படும், 100 மதிப்பெண்களை, செய்முறைத்
தேர்வுக்கு, 40, எழுத்து தேர்வுக்கு, 60 என, பிரித்து வழங்குவது என,
கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வருகைப் பதிவேடு, செய்முறைப் பதிவேடு
உள்ளிட்டவற்றின் அடிப்படையில், 40 மதிப்பெண்களையும், எழுத்துத் தேர்வுக்கு,
60 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.
இதில், தேர்ச்சிக்குரிய, 40 மதிப்பெண்களைப் பெற, செய்முறைத் தேர்வுக்கு
ஒதுக்கப்பட்ட, 40ல், குறைந்தபட்சம், 16 மதிப்பெண்களும், எழுத்து
தேர்வுக்கான, 60 மதிப்பெண்களில், குறைந்தபட்சம், 24 மதிப்பெண்களும் பெற
வேண்டும் என, முடிவு எடுக்கப்பட்டது.
முதுகலையிலும், இதே நடைமுறை அமல்படுத்தப்படும் எனவும், அதில் தேர்ச்சி
பெற, செய்முறைத் தேர்வில் குறைந்தபட்சம், 20 மதிப்பெண்களும், எழுத்துத்
தேர்வில், குறைந்தபட்சம், 30 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு
செய்யப்பட்டது.
ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடத்தில், அறிவை மேம்படுத்துவதற்கு, வாசித்தல்,
குழு விவாதம் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
குறிப்பாக, பட்டப் படிப்புகளுக்குப் பின், வேலை வாய்ப்புகளைப் பெற,
ஆங்கிலத்தில், தகவல் தொடர்புத் திறன் அவசியமாக இருப்பதால், இதில் அதிக
கவனம் செலுத்த, உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. பல்கலைகளின்
பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக, ஒரு கோடி ரூபாயை, தமிழக அரசு
ஒதுக்கியுள்ளது.
பாடத் திட்டங்களை, எந்தெந்த வகையில் மேம்படுத்துவது என்பது குறித்து,
விரிவாக விவாதித்து, ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை செய்ய, தனிக்குழு
அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும்,
கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பான அரசின்
முடிவு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், உயர்கல்வி துறை மானியக்
கோரிக்கையின் போது, அறிவிப்பாக வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்
2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான
விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கல்வி துறையால் நடத்தப்படும், தட்டச்சு, சுருக்கெழுத்து,
கணக்கியல் தேர்வுகள் 2013, பிப்ரவரியில் நடைபெற உள்ளன. இதில் விண்ணப்பிக்க
விரும்பும், அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் மற்றும் தனி
தேர்வர்கள், www.tndte.com, www.tndte.gov.in என்ற இணையதளத்திலிருந்தும்,
தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் இருந்தும் விண்ணப்ப படிவங்களை பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தனி தேர்வர்கள்,
நேரிலோ அல்லது தபால் மூலமோ டிசம்பர் 11ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பயிலகங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நேரிலோ
அல்லது தபால் மூலமோ, டிசம்பர் 13ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும்
தகவல்களுக்கு, 044-2235 1018 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Thursday, November 1, 2012
மொத்தமாக எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை

மொத்தமாக, அதிக எண்ணிக்கையில், எஸ்.எம்.எஸ்., மற்றும்
எம்.எம்.எஸ்., செய்திகளை அனுப்புவதை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள மத்திய
அரசு, அதில், யார் யாருக்கு விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து,
முடிவெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.வதந்தி, தீ போல பரவக் கூடியது.
ஒருவர், பத்து ரூபாயைத் திருடி விட்டாராம் என பரப்பப்படும் வதந்தி,
பத்தாவது நபரைச் சென்றடையும்போது, பத்து கோடி ரூபாயாக மாறியிருக்கும்; அந்த
அளவுக்கு, "வதந்தீ' கொடூரமானது.உண்மையான, நல்ல, நட்புறவான தகவல்களை,
ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, அருமையான ஊடங்களாக இருக்கும், மொபைல்
போனின், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., கலவரங்களை ஏற்படுத்தி விட்டன
என்பது, சமீப கால உண்மை.வட கிழக்கு மாநிலங்களில் நடந்த சம்பவங்களை, ஒரு
தரப்பினர், தவறாக புரிந்து கொண்டு, வதந்தியை பரப்பும் விதத்தில் அனுப்பிய,
எஸ்.எம்.எஸ்., செய்திகளால், நாட்டின் பல பகுதிகளில் தங்கி வேலை பார்த்து
வந்த, வட கிழக்கு மாநிலத்தவர் ஏராளமானோர், ஆகஸ்டில் தங்கள் சொந்த
மாநிலங்களுக்கு திரும்பினர்.
சொந்த நாட்டிலேயே அகதிகள் போல ஆக்கப்பட்ட, அவர்களை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முயன்றும் முடியவில்லை.அதையடுத்து, மொத்தமாக, அதிக எண்ணிக்கையில் (பல்க்), எஸ்.எம்.எஸ்., செய்திகளை அனுப்ப, மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது; நிலைமையும் சில நாட்களில் சீரானது.
ஆனால்,"பல்க்' எஸ்.எம்.எஸ்., செய்திகளை பரிமாறிக் கொள்ளும் காது கேளாதோர், தகவல்களை தெரிவிக்கும் நிறுவனங்கள், ரயில்வே, விமான விசாரணை தகவல்கள் பாதிக்கப்பட்டன.
பல்க் எஸ்.எம்.எஸ்., என்ற பிரிவிற்குள் கொண்டு வரப்படும் பிரிவினர், யார் யார், யாருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய, முன்வந்த மத்திய உள்துறை அமைச்சகம், அது குறித்து ஆராய, குழு ஒன்றை அமைத்துள்ளது.அந்த குழுவிற்கு, தொலை தொடர்புத்துறை இயக்குனர், ஆர்.சாக்யா அமைப்பாளராக இருப்பார். அதில், தொலை தொடர்புத்துறை, தகவல் தொழில்நுட்பம், உளவுப் பிரிவினர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் போன்ற அமைப்பினர் இடம்பெற்றிருப்பர்.இந்த உயர்மட்ட குழு, பட்டியல் ஒன்றைத் தயாரித்து, பல்க் எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., குறித்து முடிவு செய்யும்.
ஆசிரியர் பணி நியமனம்: மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை
உடற்பயிற்சி, ஓவிய ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 3
சதவீத இடஒதுக்கீடு, பின்பற்றப்படாததால், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி
வைக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்
மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம்
முழுவதிலும், பல்வேறு பள்ளிகளில் காலியாக உள்ள, உடற்பயிற்சி மற்றும் ஓவிய
ஆசிரியர் பணியிடங்களுக்கு, 1,400 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், முன்னுரிமை விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் படி,
ஒரு மாற்றுத்திறனாளிக்கு கூட முன்னுரிமை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது.
எனவே, இப்பணிகளுக்கு ஏற்ற மாற்றுத் திறனாளிகள் யாரும் வேலை வாய்ப்பு
அலுவலகங்களில் பதிந்திருக்கவில்லை என்றால், அத்தகவல் வெளிப்படையாக
தெரிவிக்கப்பட வேண்டும் .
அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கு, சட்டப்படி, 3 சதவீத ஒதுக்கீடு
அளித்த பின், பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். அது வரையில், ஆசிரியர்
பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பண்டிகை முன்பணம் ரூபாய் .2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு / ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம்
ரூபாய்.2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழக முதல்வர் இன்று(01/11/12)
பேரவையில் அறிவிப்பு. விரைவில் இதற்கான அரசாணை நம் இணையதளத்தில்
வெளியிடப்படும்.
Wednesday, October 31, 2012
கன மழை - பல மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு நாளை (01.11.12) விடுமுறை !...
நீலம் புயல் காரணமாக நாளை (01.11.2012) 25 மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TIRUPUR
KRISHNAGIRI
SIVAGANGAI
TIRUNELVELI
DHARMAPURI
PERABALUR
ARIYALUR
THIRCHY
NEELAGIRI
KRISHNAGIRI
SIVAGANGAI
TIRUNELVELI
DHARMAPURI
PERABALUR
ARIYALUR
THIRCHY
NEELAGIRI
வேலூர் -பள்ளி, கல்லூரிகள்
காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவண்ணாமலை - பள்ளிகள், கல்லூரிகள்
நாகை - பள்ளிகள், கல்லூரிகள்
கரூர் - பள்ளிகள்
உதகை - பள்ளிகள், கல்லூரிகள்
ஈரோடு - பள்ளிகள், கல்லூரிகள்
சென்னை - பள்ளிகள், கல்லூரிகள்உதகை - பள்ளிகள், கல்லூரிகள்
ஈரோடு - பள்ளிகள், கல்லூரிகள்
காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவண்ணாமலை - பள்ளிகள், கல்லூரிகள்
நாகை - பள்ளிகள், கல்லூரிகள்
தஞ்சை - பள்ளிகள், கல்லூரிகள்
புதுக்கோட்டை - பள்ளிகள், கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கடலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
விழுப்புரம் - பள்ளிகள், கல்லூரிகள்
இராமநாதபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
தூத்துக்குடி - பள்ளிகள், கல்லூரிகள்
கன்னியாகுமரி - பள்ளிகள், கல்லூரிகள்
நெல்லை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகள், கல்லூரிகள்
நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - துணைவேந்தர்
குரூப்-2 தேர்வு வரும் 4 ம் தேதி நடக்கிறது!
நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6.5
லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும்,
டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது.
நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அத்தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்&' ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவம்பர் 4ல், மறுதேர்வு நடக்கும் என தேர்வாணையம் அறிவித்தது.
அதன்படி, 4ம் தேதி நடக்கும் மறுதேர்வில், ஏற்கனவே பதிவு செய்த, 6.5 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்&', தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும், 3,456 மையங்களில், தேர்வு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக, தேர்வாணைய தலைவர் நடராஜ் தெரிவித்தார். வழக்கம் போல், அனைத்து தேர்வு மையங்களிலும், வீடியோ கண்காணிப்பு இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.
நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அத்தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்&' ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவம்பர் 4ல், மறுதேர்வு நடக்கும் என தேர்வாணையம் அறிவித்தது.
அதன்படி, 4ம் தேதி நடக்கும் மறுதேர்வில், ஏற்கனவே பதிவு செய்த, 6.5 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்&', தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும், 3,456 மையங்களில், தேர்வு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக, தேர்வாணைய தலைவர் நடராஜ் தெரிவித்தார். வழக்கம் போல், அனைத்து தேர்வு மையங்களிலும், வீடியோ கண்காணிப்பு இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.
Tuesday, October 30, 2012
"இனி 9, 10ம் வகுப்புகளும் கட்டாய கல்வி சட்டத்தில்"
இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், 9, 10ம் வகுப்புகளையும்
சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த வரைவு அறிக்கையை
தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு
அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ல், இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு
வந்தது. இச்சட்டம், நாடு முழுவதும், 2010ல், அமலுக்கு வந்தது. இதன்படி, 14
வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும்
கட்டாயக் கல்வி கற்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.
மேலும், எட்டாம் வகுப்பு வரை, மாணவ, மாணவியரை தோல்வி அடைய
செய்யக்கூடாது; அனைவரையும் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்பது உட்பட,
பல்வேறு முக்கிய அம்சங்கள், அச்சட்டத்தில் உள்ளன.
தமிழகத்திலும், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலில் இருக்கிறது.இந்நிலையில், ஒன்பது, 10ம் வகுப்பையும், இந்த சட்டத்தில் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து விரிவாக ஆலோசித்து, வரைவு அறிக்கையை தயாரிப்பதற்காக,
அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், தனி குழுவையும்
அமைத்துள்ளது. இக்குழு, வரைவு அறிக்கை தயாரிக்கும் பணியில், மும்முரமாக
ஈடுபட்டுள்ளது. மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின், 60வது கூட்டம், நவ., 1ம்
தேதி, டில்லியில் நடக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய
அமைச்சர் பல்லம் ராஜு தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பல்வேறு மாநில கல்வி
அமைச்சர்கள், செயலர்கள் மற்றும் கீதா புக்கல் தலைமையிலான குழு
உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில்
செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடு, தற்போதைய நிலை, புதிய
திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், இந்த
சட்டத்தை, ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தும் திட்டமும்,
நிகழ்ச்சி குறிப்பில் இடம் பெற்றுள்ளன.தமிழகத்தைப் பொறுத்தவரை, 10ம்
வகுப்பிற்கு, பொதுத் தேர்வு முறை உள்ளது. இதனால், 10ம் வகுப்பிற்கு, இந்த
சட்டத்தை எப்படி அமல்படுத்தப் போகின்றனர் என, தெரியவில்லை. மேலும், மத்திய
அரசு கொண்டு வரும் திட்டத்தை, அப்படியே, தமிழக அரசு ஏற்குமா எனவும்
தெரியவில்லை.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசின் அறிவிப்பு, உடனடியாக அமலுக்கு வராது. வரைவு அறிக்கை மீது, பல
கட்டங்களில் விவாதம், ஆய்வு நடக்கும். அதன்பின், இறுதி அறிக்கையை
தயாரித்து, மாநில அரசுகளுக்கு வழங்கும். அதன்மீது, முதல்வர் ஆய்வு நடத்தி,
இறுதி முடிவை எடுப்பார். அடுத்த கல்வியாண்டில் வருவதற்கு வாய்ப்பு
இல்லை.நமது மாநிலத்தில், 10ம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு திட்டம்
இருப்பதால், பொறுமையாக ஆய்வு செய்த பிறகே, முடிவு எடுக்கப்படும். இவ்வாறு,
அந்த அதிகாரி தெரிவித்தார்.
என்னென்ன கிடைக்கும்? இந்த சட்டம், ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கும்
வரும்போது, கல்விக் கட்டணம் ரத்து, இலவச சீருடை, இலவச புத்தகம், இலவச
நோட்டுகள், மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை, இலவச மதிய உணவு, இலவச சைக்கிள்
என, பல்வேறு திட்டங்கள், மாணவ, மாணவியருக்கு கிடைக்கும்.
Tuesday, September 11, 2012
வைராலஜி - புதிய தொழில்நுட்ப படிப்பு

தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. தொழில்நுட்ப
வளர்ச்சியில் இந்தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது. அதே நேரத்தில் உலகில் புதிய புதிய நோய்களும் பரவி வருகின்றன.
காரணம் கண்டுபிடிக்க முடியாத வினோதமான நோய்களை கண்டுபிடிப்பதற்கான நிபுணர்களின் தேவையும் ஏற்படுகிறது. வைரஸ் நோய்களை பற்றிய படிப்புதான் இற்கு தீர்வு ஆகும். வைரஸ்களை பற்றிய படிப்பு இங்கே பார்ப்போம்.
வைராலாஜி தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள மாணவர்கள் இனிமேல் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை. தற்போது இந்திய கல்வி நிறுவனங்களே உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குகின்றன என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தகுதி: எம்.பி.பி.எஸ்., லைப் சயின்ஸ் பாடத்தில் பி.எஸ்சி.,பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி அல்லது உயிரியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருந்தால் எம்.எஸ்சி., வைராலஜி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம், நுழைவுத்தேர்வை எழுதுவது கட்டாயம், இளநிலைப் பட்டப்படிப்பு நிலையில், ஆய்வக அனுபவம் இருந்தால்,கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவரின் ஆர்வத்தைப் பொறுத்து, மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பார்மசூட்டிகல் நிறுவனங்கள், அரசு ஏஜென்சிகள், பேதாலஜி ஆய்வகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
இப்படிப்பு வழங்கப்படும் கல்வி நிறுவனங்கள்:
1, நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, புனே
2, நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேபல் டிசீஸ், டெல்லி
3, மணிபால் சென்டர் பார் வைரஸ் ரிசர்ச், மணிபால்