Saturday, August 11, 2012

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 2

1. மதுரையில் வாழ்ந்த சங்கப்புலவர்கள் - நக்கீரனார், குமரனார், நல்லந்துவனார், மருதனிளநாகனார்,
இளந்திருமாறன், சீத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகனார், சேந்தம்பூதனார்.
2. இருபதாம் நூற்றாண்டில் நாடகக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர்கள் - பரிதிமாற்கலைஞர், சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார்.
பரிதிமாற் கலைஞர்
3. இயற்பெயர் - சூரிய நாராயண சாஸ்திரி.
4. இவரது காலம் - 1870  - 1903.
5. ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் ஆகியவை இவர் இயற்றிய நாடகங்கள்.
6. நாடக இலக்கணங்களைத் தொகுத்து, நாடகவியல் எனும் நூலை எழுதினார்.
7. மானவிஜயம் நாடகம் களவழி நாற்பது எனும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.
சங்கரதாசு சுவாமிகள்
8. இவரது காலம் 1867 - 1920
9. வள்ளி திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோசனா, இலவகுசா, பக்தப் பிரகலாதா, நல்லதங்காள், சதி அனுசுயா, வீர அபிமன்யு, பவளக்கொடி உள்ளிட்ட நாற்பது நாடகங்களை இயற்றியுள்ளார்.
பம்மல் சம்பந்தனார்
10. இவரது காலம் - 1875 - 1964.
11. மனோகரா, யயாதி, சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு உள்ளிட்ட 94 நாடகங்களை இயற்றியுள்ளார்.
12. சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி வாணிபுரத்து வணிகன், விரும்பிய விதமே, அமலாதித்தியன் முதலிய நாடகங்களைப் படைத்தார்.
Previous Post
Next Post

0 Comments: