Saturday, August 11, 2012

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 5

1. அபிதான கோசம் என்பது தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி ஆகும். இது 1902ஆம் ஆண்டு வெளியானது.

2. அபிதான சிந்தாமணி - இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப் பொருள்களையும், முதன்முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து 1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை தொகுத்து வெளியிட்டவர் சிங்காரவேலனார்.
3. பொது அறிவு, உளவியல், புவியியல், புள்ளியியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கு கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டன. மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
4. அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசன்
5. இயற்பெயர் - கனக சுப்புரத்தினம். ஊர்: புதுச்சேரி
6. பெற்றோர் - கனகசபை - லட்சுமி
7. காலம் - 29 - 04 - 1891      -     21-04-1964.
8. இயற்றிய நூல்கள் - சஞ்சீவி பர்வதத்தின் சாரல், இசையமுது, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.
9. சிறப்புப் பெயர்கள் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
நாமக்கல் கவிஞர்.வெ.இராமலிங்கம்
10. பெயர் - இராமலிங்கம்
11. பெற்றோர் - வெங்கடராமன் - அம்மணி அம்மாள்
12. பிறப்பிடம் - மோகனூர் (நாமக்கல் மாவட்டம்)
13. காலம் - 19.10.1888 - 24.08.1972
14. சிறப்பு: விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு அரசவைக் கவிஞர். கதை, கவிதைகளை எழுதித் தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவர்.
கவிமணி சி. தேசிக விநாயகம் பிள்ளை
15. இயற்பெயர் - தேசிக விநாயகம் பிள்ளை
16. சிறப்புப் பெயர் - கவிமணி
17. பெற்றோர் - சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி
18. பிறந்த ஊர் - தேரூர் (கன்னியாகுமரி மாவட்டம்)
19. காலம் - 27.08.1876 - 26.09.1954
20. இயற்றிய நூல்கள் - மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, உரைமணிகள், மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள்.
Previous Post
Next Post

0 Comments: