Thursday, November 8, 2012

ஆசிரிய தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்றும், தொடர்ந்து நடக்கிறது. வரும், 8, 9ம் தேதிகளில், முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.


இம்மாதம், 2ம் தேதி வெளியான, டி.இ.டி., தேர்வு முடிவில், 19 ஆயிரத்து 246 பேர், தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 10 ஆயிரத்து 397 பேர், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். மீதமுள்ள, 8,849 பேர், பட்டதாரி ஆசிரியருக்கான, இரண்டாம் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள்.

இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இரு நாளும் சேர்த்து, 417 பேர், பங்கேற்கின்றனர். 10 குழுக்களைச் சேர்ந்த அலுவலர்கள், சான்றிதழ்களை சரிபார்க்கின்றனர். இதில், சென்னை மாவட்டத்தில், 572 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பணிகள் முடிந்த பின், இறுதி தேர்வுப் பட்டியலில், எத்தனை பேர் இடம்பெற்றுள்ளனர் என்ற விவரம் தெரியவரும். உரிய சான்றிதழ் இல்லாத தேர்வர்கள், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியல் அடங்கிய கோப்புகளை, கல்வித்துறைக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பும்.

அதன்பின், சம்பந்தபட்ட ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடக்கும். டிசம்பர் இறுதிக்குள், 19 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post
Next Post

1 Comments:

Raaj said...

Very useful site