Monday, October 22, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 193


1) அனிமல் பார்ம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
அ. லியோ டால்ஸ்டாய்  ஆ. வாசிம் அக்ரம்
இ. ஜியார்ஜ் ஆர்வெல்      ஈ. யாருமில்லை
2) மார்ச் 8 எந்த நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது?
அ. உலக மகளிர் தினம் ஆ. சுற்றுப்புற தினம்
இ. கலாசார தினம்         ஈ. இளைஞர்கள் தினம்
3) யூரோ என்பது
அ. இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய்
ஆ. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொது நாணயம்
இ. நேட்டோ அமைப்பால் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை
ஈ. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் வழியே ஓடும் நதி
4) ஸ்ரீஅரவிந்தரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவகம் எங்குள்ளது?
அ. திருவண்ணாமலை ஆ. சென்னை
இ. வேடசந்தூர்            ஈ. புதுச்சேரி
5) இந்திய அரசின் தேசிய சின்னமான அசோகர் தூண் சாரநாத்தில் உள்ளது. இது எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
அ. உ.பி. ஆ. ம.பி.
இ. பீகார் ஈ. குஜராத்
6) ஆந்திராவிலுள்ள சிங்கரேணி எந்த உற்பத்திக்காகப் பெயர் பெற்றது?
அ. நிலக்கரி ஆ. சணல்
இ. தேயிலை ஈ. புகையிலை
7) திரிவேணி சங்கமம் என்பது 3 நதிகளின் சங்கமத்தைக் குறிக்கிறது. இது எங்கு சங்கமிப்பதாக நம்பப்படுகிறது?
அ. அகமதாபாத் ஆ. அலகாபாத்
இ. மதுரா  ஈ. வாரணாசி
8) வோல்கா என்பது என்ன?
அ. அமெரிக்க எரிமலை ஆ. ரஷ்ய எரிமலை
இ. போலந்தின் தலைநகர் ஈ. ரஷ்யாவின் மிக நீண்ட நதி
9) ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?
அ. கான்பெர்ரா ஆ. வியட்னாம்
இ. வியன்னா ஈ. ஸ்டாக்ஹோம்
10) தேசிய வனக் கமிஷனின் தலைவர் யார்?
அ. மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர்
ஆ. பிரதமர்
இ. செயலர், சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம்
ஈ. இந்திய வன ஆய்வு நிறுவன தலைவர்
11) செல்ஷியஸ் மற்றும் பாரன்ஹீட் தெர்மாமீட்டர் எப்போது ஒரே அளவைக் காட்டும்?
அ. 0 ஆ. 100 இ. 32 ஈ. 40
12) இந்தியாவில் எந்தத் துறை அதிக அளவு சேமிப்புக்கு வழி வகுக்கிறது?
அ. பாங்கிங் மற்றும் நிதித் துறை
ஆ. ஏற்றுமதித் துறை
இ. வீட்டு கட்டுமானத் துறை
ஈ. தனியார் தொழில் துறை
விடைகள்:
1. இ 2. அ  3. ஆ 4. ஈ 5. அ 6. அ 7. ஆ 8. ஈ 9. அ 10. ஆ 11. ஈ 12. அ
Previous Post
Next Post

0 Comments: