Thursday, November 8, 2012

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 26

*   Father of attachment theory - John Bowlby

*    புலன் உணர்ச்சிகளால் தூண்டப்படும் மன எழுச்சிகள் முறையே அன்பு மற்றும் பொறாமை



*    வளர்ச்சியின் காரணமாக முன்னேற்றம் நிகழலாம் அல்லது நிகழாமலும் போகலாம்.

*    எல்லாப் பருவத்திலும் வளர்ச்சி விகிதம் ஒரே சீராக அமைவதில்லை.

*   Father of Applied Psychology - Hugo Munsterberg

*    செயல்படு ஆக்க நிலையிறுத்தம் ஸ்கின்னரால் துலங்கல் சார் ஆக்க நிலைநிறுத்தம் என அழைக்கப்பட்டது.

*    ஒரு குழந்தை தனது பொம்மையை குளிப்பாட்டி, பாலூட்டி உறங்கச் செய்வது போல் நடந்து கொள்வது மன வளர்ச்சியின் செயலுக்கு முற்பட்ட நிலை

*    அச்சம் என்பது ஒரு - அடிப்படை மன எழுச்சி

*   Father of American Psychology - William James

*    மகிழ்ச்சியற்ற சுற்றுப்புறம், நண்பர்கள் இல்லாத முன் பிள்ளைப் பருவக் குழந்தைகளின் பிரச்சனை - தாழ்மை உணர்வு

*    உளத் தடுமாற்றங்களால் பீடிக்கப்பட்டவர்களின் நடத்தைகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - நெறிபிறழ் உளவியல்

*    கவனித்தலை தீர்மானிக்கும் புதுமை ஒரு - புறக்காரணி


*     புலன்காட்சியைத் தோற்றுவித்த ஒரு பொருள் இன்றியே அப்பொருள் பற்றி உணர்தல் - சாயல்

*    ஒப்பார்குழு ஆதிக்கம் தலைதூக்கி நிற்கும் பருவம் - குமரப்பருவம்

*    ஃப்ராய்டு மன பாலூக்க ஆளுமை வளர்ச்சியை 5 படிநிலைகளாக விளக்குகிறார்.

*     நினைவு கூர்தலின் முதல் நிலையாகக் கருதப்படுவது - கற்றல்

*     பின்னர் கற்றலானது முன்பு கற்றதை மறத்தல் இதற்கு என்ன பெயர் - பின்னோக்கத் தடை

*    முன்பு கற்றவை பின்னர் கற்றதை மறத்தல் இதற்கு என்ன பெயர் - முன்னோக்கத் தடை

*    டேசிஸ்டாஸ் கோப் என்னும் கருவி எதனை அளவிடப் பயன்படுகிறது - கவன வீச்சு

*    மறதிக்குக் காரணியாக அமைவது - அச்சம்

*    மறதிக்கு அடிப்படையான காரணம் - பயன்படுத்தாமை

*    ஒரே பாடத்தை நீண்ட நேரம் ஒரே கற்பித்தல் முறையில் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு ஏற்படுவது - சலிப்பு

*    ஒரே பாடத்தை நீண்ட நேரம் பல்வேறு கற்பித்தல் முறையில் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு ஏற்படுவது - மகிழ்ச்சி


*    நினைவு கூர்தலின் இறுதி நிலையாகக் கருதப்படுவது - மீட்டுக் கொணர்தல்

*    கற்றல், மனதிலிருத்தல், மீட்டறிதல்,  மீட்டுக் கொணர்தல் ஆகிய படிகளைக் கொண்டது - நினைவு

*    பழைய கற்றலானது புதிய கற்றலுக்கு உதவுவது - பயிற்சி மாற்றம்

*    பயிற்சி மாற்றக் கோட்பாடான பொதுவிதிக் கோட்பாட்டை உருவாக்கியவர் - ஜட்

*    பயிற்சி மாற்றக் கோட்பாடான உளப்பயிற்சி கோட்பாட்டை உருவாக்கியவர் - வில்லியம் ஜேம்ஸ்

*    முதலில் கற்ற செயல் புதிய செயலை கற்பதற்கு உதவி செய்தால் அந்த பயிற்சி மாற்றத்திற்கு பெயர் - நேர் பயிற்சி மாற்றம்.

*    முதலில் கற்ற செயல் புதிய செயலைக் கற்பதற்கு தடையாக இருந்தால் அந்த பயிற்சி மாற்றத்திற்கு பெயர் - எதிர் பயிற்சி மாற்றம்

*    முதலில் கற்ற செயலானது ஒர் புதிய செயலைக் கற்பதற்கு உதவாமலோ அல்லது தடையாக இல்லாமலோ இருந்தால் அந்தப் பயிற்சி மாற்றத்திர்கு பெயர் - பூஜ்ய பயிற்சிய மாற்றம்

*    மனதில் இருத்தியதை வெளியே ஒர் தூண்டுதலாய்த் தெரியும் பொழுது அதை அடையாளம் கண்டு கொள்வது - மீட்டறிதல்

*    கற்றவற்றை நமக்குத் தேவைப்படும் வரை மனதில் வைக்கப்படும் நினைவின் பகுதி - மனத்திலிருத்தல்

*    குறுக்கீடுக் கொள்கை எதனுடன் தொடர்புடையது - மறதி.


*    மறதி வளைவுப் பரிசோதனையை அளித்தவர் - எபிங்காஸ்

*    கற்றலுக்கு ஊக்கம் இல்லாமலிருந்தால் கற்பவர் தேர்ச்சியடைவதில்லை இதற்கு என்ன பெயர் - ஊக்கு வித்தல் எல்லை

*    மாணவர்களின் குறிக்கோள் எளிதாக அடையக் கூடியதாக இருந்தால் அந்த மாணவர் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் இழந்து விடுவார் இதற்கு என்ன பொருள் - உளவியல் எல்லை

*    ஒருவன் கற்றலில் தேவையான முன்னேற்றத்தை அடைந்த பொழுது மேற்கொண்டு எத்தகைய முன்னேற்றமும் இருக்காது இதற்கு என்ன பெயர் - அறிவு எல்லை

*    பயிற்சியில் முன்னேற்றமில்லாதபொழுது கற்றல் நிகழ்வு நிலையாக உள்ளது இதற்கு என்ன பெயர் - தேக்க நிலை

*    பயிற்சி மாற்றக் கோட்பாடன குறிக்கோள் கோட்பாட்டை உருவாக்கியவர் - பாக்லி

*    ஒரு கற்றல் வரைபடத்தில் கற்றலின் வளர்ச்சி ஒரே விகிதத்தில் இருக்கிறது இதன் பொருள் - பூஜ்ஜய முன்னேற்றம்

*    கற்றல் வரைபடத்தில் கற்றலின் வளைவின் தட்டையான பகுதிக்கு என்ன பொருள் - தேக்க நிலை

*    கற்றல் வரைபடத்தில் கற்றல் தொடக்கத்தில் குறைவாகவும் பின்னர் பயிற்சியினால் அதிகமாக இருப்பதையும் குறுக்கின்றது - இதற்கு என்ன பொருள் - நேர் மறை முன்னேற்றம்


*    ஒரு கற்றல் வரைபடத்தில் கற்றல் தொடக்கத்தில் வேகமாக நிகழ்த்தும் பின்னர் பயிற்சியினால் மெதுவாக நிகழ்கிறது இதற்கு என்ன பொருள் - எதிர்மறை முன்னேற்றம்.

*    வயதுகேற்ற முறையில் நுண்ணறிவுச் சோதனையை அமைத்தவர் - பினே - சைமன்.

*     மனவயதுக்கும் கால வயதுக்கும் இடையே உள்ள தொடர்பு - நுண்ணறிவு ஈவு

*    வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)

*    மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ்,  மாஸ்கோ

*    உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)

*    உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)

*    முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt

*    தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்

*    மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்

*    அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.

*    நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet,  சைமன் Theodore Simon

*    கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)]

*   Father of Analytical Psychology - Carl Jung
Previous Post
Next Post

0 Comments: