Thursday, November 8, 2012

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சுழ்நிலையியல் முதல் தாள் பகுதி 2* கோடைக்காலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை - வெப்பச் சலன மழை

* காற்றில் உள்ள நீராவியின் அளவே - ஈரப்பதம்

* வடஇந்தியச் சமவெளிகளில் மே, ஜூன் மாதங்களில் வீசும் காற்று - லூ

* ஈரப்பதத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்கும் மண் - கரிசல் மண்


* நன்செய்ப் பயிர்களுக்கு மிகவும் ஏற்ற மண் - வண்டல் மண்

* மணல் ஆறு என குறிப்பிடப்படுவது - கடற்கரை

* புன்செய்ப் பயிர்களுக்கு ஏற்ற மண் - செம்மண்.

* செம்மண்ணின் சிவப்பு நிறத்திற்குக் காரணம் - அதில் உள்ள இருந்பு ஆக்சைடு.

* ஒரு சமூக நோய் என வழங்கப்படுவது - தொழுநோய்

* AIDS என்பதன் விரிவாக்கம் - Acquired Immuno Deficiency Syndrome

* எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான வைரஸ் - Human Immuno Deficiency Virus

* DTP தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய்கள் - டிப்தீரியா, கக்குவான், இரண ஜன்னி

* BCG தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய் - காச நோய்

* காலரா பரவக் காரணமான நுண்ணுயிர் - விப்ரியோ காலரே

* நலம் என்பதன் முப்பரிமாணங்கள் - உருப்பரிமாணம், உளப்பரிமாணம் மற்றும் சமூக பரிமாணம்

* அக்காலிபா இண்டிகா என்பது எத்தாவரம் - குப்பை மேனி

* அகாலிபா எனும் மருந்து எந்த தாவரத்திலிருந்து கிடைக்கிறது - குப்பை மேனி

* கடத்திகளின் மூலம் கடத்திகளின் மூலம் பரவும் நோய் - ரேபிஸ்

* எலும்புருக்கி நோய் - தொற்றும் தன்மையுடைய நோய்

* குழந்தைகளின் தைராய்டு சரப்பி சரிவர வேலை செய்யாவிட்டால் தோன்றும் நோய் - கிரட்டினிசம்

* புகையிலையில் இருக்கும் நச்சுப் பொருள் - நிக்கோடின்.

* ஈரடுக்கு உயிரிகள் என்பவை - குழியுடலிகள்

* கரப்பான் பூச்சியின் இதயம் எத்தனை அறைகளாகப் பிரிகிகப்பட்டுள்ளது - 13 அறைகளாக

* இருட்டுப்பூச்சி என்பது - கரப்பான் பூச்சி

* கரப்பான்பூச்சியின் கூட்டுக்கண்ணில் அடங்கியுள்ள தனிக் கண்ணின் பெயர் - ஓமாட்டிடியம்

* கரப்பான் பூச்சியின் மேல் உதடு எவ்வாறு அழைக்கப்படுகிறது - லேப்ரம்

* கரப்பான் பூச்சியின் சுவாசக் குழாயின் பெயர் - டிரிக்கியா

* கால்நடைகளுக்கு வரும் பாக்டீரிய நோய்களில் ஓன்று - ஆன்த்ராக்ஸ்.

* கால்நடைகளின் வாய் மற்றும் பாதங்களைத் தாக்கும் வைரஸ் நோய் - கோமாரி நோய்

* குடிநீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படும் வேதிப் பொருள் - கால்சியம் குளோரோ ஹைப்போ குளோரைட்.

* சின்ன அம்மைக்குத் தடுப்பூசி முறையை அறிமுகப்படுத்தியவர் - எட்வர்டு ஜென்னர்.

* எலும்புருக்கி நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து - ஐஸோநியாசிட்

* சித்த மருத்துவம் எதிலிருந்து தோன்றியது - ஆயுர்வேத மருத்துவத்திலிருந்து

* ரேபிஸ் என்பது - வெறிநாய் கடி

* மனிதனின் தலையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை - 22

* கரைந்துள்ள உப்புகள் அதிகம் இருப்பது - கடல் நீர்

* எரியும் கழிவுகளை தொடர்ந்து எரிப்பதால் நடைபெறுவது - காற்று மாசுறுதல்

* வெள்ளை செல்கள் குறையும் போது உண்டாகும் நோய் - லியூக்கோசைட்டுகள்.

* மூளையின் எடை - 1.36 கிலோகிராம்

* உணவுப் பொருளைக் கடத்தும் திசு - புளோயம்

* எளிய திசுக்கள் - பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளிரென்கைமா

* நாவில் சுவையை அறிய உதவும் அமைப்புகள் - சுவை அரும்புகள்.

* மனிதனின் இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் - வில்லியம் ஹார்வி

* எரித்ரோசைட்டுகள் என்பவை - சிவப்பு இரத்த செல்கள் RBC

* இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் - 100 - 120 நாட்கள்

* சிவப்பு இரத்த செல்கள் எண்ணிக்கையில் குறைவதால் ஏற்படுவது -  இரத்த சோகை

* இரப்பை நீரில் காணப்படும் நொதிகள் - ரெனின், பெப்சின், லிப்பேஸ்

* கேசினோஜனை கேசினாக மாற்றும் நொதி - ரெனின்.

* மெட்டாபோலி என்பது - உடல் சுருக்க இயக்கம்.

*  சுய ஜீவி ஊட்டமுறையைக் கொண்டவை - தாவரங்கள்

* இடம் விட்டு இடம் நகரும் தாவரம் - கிளாமிடோமோனஸ்

*  அல்லியம் சட்டைவம் என்பது - வெங்காயம்

* பரிணாமக் கோட்பாட்டை விளக்கியவர் - டார்வின்

* இரு பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் - லின்னேயஸ்

* ஐந்துலக வகைப்பாட்டு முறையைப் புகுத்தியவர் - விட்டேக்கர்

*  இடம் விட்டு இடம் நகராத விலங்குயிரி - பவளப்பூச்சி

* லில்னேயஸ் வெளியிட்ட நூல்கள் - லிஸ்டமாநேச்சுரே, ஜெனீரா பிளாண்டாரம்

* பால் இனப்பெருக்க முறை வகைப்பாட்டினைத் தந்தவர் - லின்னேயஸ்

0 comments: