Wednesday, October 31, 2012

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 29

*    புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ....... என்கிறோம். - மனபிம்பம்

*    புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை - ஐந்து

*    புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.

*    புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர்- மாண்டிசோரி

*    புலன் காட்சிகள் அடிப்படை - கவனம்


*    புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி

*    புலன் இயக்க நிலையின் வயதுபிறப்பு முதல் 2 வயது வரை

*    புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி

*    புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம் - ஆசிரியரின் நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு, ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு, ஆசிரியரின் இயங்கும் பண்பு மற்றும் நடத்தை

*    புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.

 *   புதுமையான சொற்களை எழுதும் பயிற்சி பற்றி குறிப்பிட்டவர் - மால்ட்ஸ் மேன்

 *   புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது - சூழ்நிலை

*    பின்னோக்குத்தடையை ஆராய்ந்தவர் - முல்லர், பில்சக்கர்

*    பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது - பின்னோக்குத் தடை

*    பின் வருவனவற்றுள் எது மகிழ்ச்சி தரும் செயல்பாடு? - கலைநிகழ்ச்சி, உல்லாச பயணம்,  பள்ளி விழாக்கள்


*    பின் குழந்தைப் பருவம் அல்லது பள்ளிப் பருவம் எந்த வயதில் தொடங்குகின்றது -  4 வயது

*    பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.

*    பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை -  அகநோக்கு முறை.

*    பிறருடைய கவிதைத் திறனை ரசிப்பது - பின்பற்றல் கற்பனை

*    பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம் - தர்ம சிந்தனை

*    பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர் - ஏ.குரோ, சி.டி.குரோ

*    பிறந்து ஒரு வயதான குழந்தை தான் வேறு தன்னை சுற்றியுள்ளவர்கள் வேறு என்று அறிந்துகொள்ளும் - சரி

*    பிறந்ததிலிருந்து இரண்டு வாரம் முடிய உள்ள பருவம் - சிசுப் பருவம்

*    பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது - உடல் தேவை

*    பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144


*    பிறந்த குழந்தையின் நியூரான்களில் மையலின் ஷீத் எப்படி இருக்கும்?  - இருப்பதில்லை, வளர வளர இருக்கும்

 *   பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130

 *   பிறக்கும் போதிலிருந்து காணப்படும் மனவெழுச்சி - அச்சம்

*   பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும் -  ஒத்திருக்கும் விதி

*   பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஆஸ்திரியா

*   பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு  - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்

*   பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு - குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது

*   பியாஜேயின் கோட்பாடு - குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது

*   பியாஜேயின் கோட்பாடு - குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.

*   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை .......கண்கூடாக பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை

*   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை

*   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்


*   பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ஸ்கீமா

*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (வயது 7 – 11)

*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் முதல் நிலை புலன் இயக்க சிந்தனை வளர்ச்சி (வயது 0 – 2)

*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நான்காம் நிலை முறையான சிந்தனை வளர்ச்சி (வயது 11க்கு மேல்)

*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் இரண்டாம் நிலை முற் சிந்தனை வளர்ச்சி (வயது 2 – 7)


*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் - 4

*   பாவ்லோவின் சோதனை முறை கீழ்வருவனவற்றுள் எவற்றுடன் தொடர்புடையது? - அறிவுசார்

*   பாலுணர்வு முதிர்ச்சிக்கும், சட்டப்படியான முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட காலம் குமரப் பருவம் எனக் கூறியவர்ஹர்லாக்

*   பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் - உடலியல் தேவை

*   பால் கல்வியை - பள்ளிகளில் பாடங்களோடு இணைத்து கற்பிக்க வேண்டும்.


*   பாரா தைராய்ட் என்பது -  கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவினைக் கட்டுப்படுத்தி எலும்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது

*   பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி

*    பார்வையற்றோருக்கான எழுத்துமுறையை உருவாக்கியவர் - ப்ரெய்ல்
*   பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில்
தினமணி கல்வி **************  தினமணி கல்வி

*   பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்

*   பாத்பவன் என்பது - உயர்நிலைப்பள்ளி

*   பாடம் கற்பித்தலின் முதற்படி - ஆயத்தம்

*   பன்முக நுண்ணறிவு கோட்பாட்டை தந்தவர் -  ஹொவர்டு கார்டனர்

*   பள்ளிப்பருவம் என்பது - 6- 10 ஆண்டுகள்

*   பள்ளிக்கு கடிதங்கள் -   ஜே கே கிருஷ்ணமூர்த்தி

*   பள்ளி முன் பருவம் என்பது -  3-6 ஆண்டுகள்


*   பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி

*   பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம் காப்பான்.

*    பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்- பிரமதேயம்
*   பரிசோதனை முறைக்கு வேறுபெயர் -கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.

*    பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை

*   பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் - பரிசு

*   பயனீட்டு வாதம் (Pragmatism) - ஜான் டூயி

*   பய உணர்வு எதை பாதிக்கும்? - மனநலம்

*   பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.

*   பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.

*   படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ

0 comments: